பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 309

வலத்தில்-வலப்பக்கத்தில். மாறு-ஒப்பு. இலாய்-இல்லாத வனாகிய திண்ணனே; இடைக்குறை. நிற்க-நீ நிற்பாயாக. என்று-எனத் திருவாய் மலர்ந்தருளிச்செய்து. மன்னு-நிலை பெற்று விளங்கும். பேர்-பெரிய அருள்-தம்முடைய திருவருளை. புரிந்தார்-விரும்பி வழங்கினார். பேறு. பெறவேண்டிய பாக்கியம். இனி-இனிமேல். இதன் மேல்இதற்கு மேல். உண்டோ-திண்ணனாருக்கு இருக்கிறதோ? இல்லை என்பது கருத்து. -

இடபத் துவசத்தைப் பிடித்தவர்: 'விடையார் கொடி உடையான்.', 'விடையார் கொடியுடையவ்வணல்.’, 'விடைசேர் கொடி அண்ணல்.’’, 'விடையார் கொடி ஒன்றுடை எந்தை.', 'அடலே றமரும் கொடி அண்ணல்.’’, "கொடிமேல தொர் பைங்கண் விடையான்.' கொடி மேல் ஏறுகொண்டாய்.', 'வெள்ளை ஏறார் கொடியார்.', விடையார் கொடி எந்தை.', 'செங்கண் ஏறணி வெல் கொடியான்.', 'விடைபுல்கு கொடி ஏந்தி.', 'சேவுயரும் திண்கொடியான்.', 'வெள்ளேற்றின் கொடியானை,, 'கொடிகொள் ஏற்றினர்.', 'ஏறார்கொடி எம் இறை.", செங்கண் வெள்ளேற்றின் கொடியான்,', 'விடையார் கொடியான் மேவி உறையும் வெண்காட்டை.', 'விடையார் கொடியார்.', 'விடை நவிலும் கொடியானை.', 'விடை யமரும் கொடியாரும்.', 'கொடிகொள் ஏற்றினர்.", 'விடையுடைக்கொடி மல்கு வேதியனே.", ஏறுடை வெல் -கொடி எந்தை.','விடையுடை வெல் கொடி ஏந்தினானும்.', :கொடி உயர் மால்விடை.', 'விடையுடைக் கொடி வலன் ஏந்தி.', 'விடையுடைக் கொடியர்.', 'விடைமலி கொடி அண்ணல்,, 'விடையமர் கொடியினான்.”, கொடி கொள் ஏற்றினர் கூற்றை உதைத்தனர்.', 'விடைநவிலும் கொடியான் விரும்பும்மிடம் வெண்டுறையே.', 'விடை உயர் வெல் கொடியான்.” என்று திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும், 'விடை தருகொடியும் வைத்தார்.”, விடை தருகொடியர் போலும்.', 'ஏற்று வெல் கொடி ஈசன்.",