பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 - . பெரிய புராண விளக்கம்-4

'கொடியார் இடபத்தர்.', 'விடையோடு கொடியும் தோன்றும்.', 'ஏறணிந்த கொடியுடை எம் இறைவர்.', 'விடையேறு வெல் கொடி எம் விமலனாரும்.’’, கொடி யேறும் வெள்ளேற்றாய்.”, “கொடியாரதன் மேல் இடபம் கண்டேன்.', 'விடை வென்றிக் கொடியதனில் மேவக் கொண்டார்.', 'ஏறுடைய கொடி உண்டோ. என்று திருநாவுக்கரசு நாயனாரும், 'கொடிகொள் ஏற்றர்.”, 'விடைக் கொடி எம்பெருமான்.', 'கொடிபடு முரிவெள்ளை எருதேற்றையும்.', 'விடையாரும் கொடியாய்.”, “ஏறுதாங் கிய கொடியரோ.', 'விடை அரவக் கொடி ஏந்தும் விண்ணவர்தம் கோனை.', 'விடையார் கொடியன் வேத நாவன்.' என்று சுந்தரமூர்த்தி நாயனாரும், “சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி., 'கோதிலாஏறாம் கொடி.' என்று மாணிக்கவாசகரும், 'ஏறணி கொடி எம் ஈசனே.", "சேவேந்து வெல் கொடியானே.” என்று திருமாளிகைத் தேவரும், 'கொடி மேல் இடபமும்.’’, ‘கொடிக் கண்ணி

மேல் நல்ல கொல்லேறுயர்த்த குணக் குன்றமே.', 'ஏற்றுக் கொடியும் பதாகையும்.’’ என்று சேரமான் பெருமாள் நாயனாரும், வீரவெள்விடைக் கொடியும்.” என்று

பட்டினத்துப் பிள்ளையாரும், விடைபடு கேதுக.' என்று நம்பியாண்டார் நம்பியும், விடை உயர்த்தார் திருத் தோணி.', 'ஏறுயர்த்தார் திருப்பாற்றுறையும்.', 'ஏறு யர்த்தார் சைவ நெறி.’’, ‘ஏறணிந்த வெல் கொடியார் இனி தமர்ந்த பதிபிறவும்.’’ என்று சேக்கிழாரும் பாடியருளியவற். றைக் காண்க. ஊர்திவால் வெள்ளேறே சிறந்த, சீர்கெழு கொடியும் அவ்வேறென்ப.' (புறநானூறு, 1:3-4) என்று பாரதம் பாடிய பெருந்தேவனாரும், ஏற்றுவலன் உயரிய எரிமருள் அவிர்சடை, மாற்றரும் கணிச்சி மணி மிடற்றோனும்.’ (புறநானூறு, 56: 1-2) என்று நக்கீர னாரும் பாடியவற்றையும் காண்க. .

அடுத்து வரும் 186-ஆம் பாடல் இந்தக் கண்ணப்ப நாயனார் புராணத்தின் இறுதிப் பாடல். அதன் கருத்து வருமாறு: - . . . . . . . . .