பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 3II

மேகங்கள் தவழும் அழகிய காளத்தி மலையில் திருக் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் அரசராகிய காளத்தி நாதருடைய திருவிழியில் உண்டான புண்ணி விருந்து வழிந்த இரத்தத்தைத் தம்முடைய விழியினால் மாற்றும் பேற்றைப் பெற்ற தலைவராகிய கண்ணப்ப நாயனாருடைய திருவடிகளை அடியேனுடைய தலையின் மேல் வைத்துக் கும்பிட்டு வணங்கி விட்டு, கங்கையாறு தங்கும் சடாபாரத்தைத் தம்முடைய தலையின்மேற் பெற்ற வராகிய அமிர்தகடேசுவரர் எழுந்தருளியிருக்கும் திருக் கடவூரில் திருவவதாரம் செய்தருளிய குங்குலியக் கலய நாயனாராகும் பொங்கி எழுந்த புகழை மிகுதியாகப் பெற்ற வர் செய்த திருத்தொண்டினை இனிமேல் அடியேன் பாடத் தொடங்கினேன். பாடல் வருமாறு:

ச. மங்குல்வாழ் திருக்கா ளத்தி மன்னனார் கண்ணிற்

புண்ணிர் தங்கணால் மாற்றப் பெற்ற தலைவர்தாள் தலைமேற் . . . . . - . கொண்டே கங்கைவாழ் சடையார் வாழும் கடவூரிற் கலய னாராம் பொங்கிய புகழின் மிக்கார் திருத்தொண்டு புகல - லுற்றேன்.' இது சேக்கிழார் அடுத்து வரும் குங்குவியக் கலய நாய அனார் புராணத்திற்குத் தோற்றுவாயாகப் பாடியது. மங்குல்-மேகங்கள்: ஒருமை பன்மை மயக்கம். வாழ்தவழும். திரு.அழகிய, க்: சந்தி. காளத்தி-காளத்தி மலையில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும். மன்னனார்-அரசராகிய காளத்திநாதருடைய. கண்ணில்திருவிழியில் உண்டான, புண்-புண்ணிலிருந்து வழிந்த, நீர்இரத்தத்தை. தம்-தம்முடைய. கணால்-விழியைக் கொண்டு; இடைக்குறை. மாற்றப் பெற்ற-மாற்றும் பேற்றைப் பெற்ற தலைவர்-தலைவராகிய கண்ணப்ப நாயனா ருடைய தாள்-திருவடிகளை ஒருமை பன்மை மயக்கம். தலைமேல்-அடியேனுடைய சிரத்தின் மீது. கொண்டு