பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 பெரிய புராண விளக்கம்-4

வைத்துக்கொண்டு கும்பிட்டு வணங்கிவிட்டு. ஏ: அசை நிலை. கங்கை-கங்கையாறு. வாழ்-தங்கும். சடையார்சடாபாரத்தைத் தம்முடைய தலையின்மேற் பெற்றவ. ராகிய அமிர்தகடேசுவரர். வாழும்-எழுந்தருளியிருக்கும். கடவூரில்-திருக்கடவூரில் திருவவதாரம் செய்தருளிய. கலயனார் - குங்கிலியக் கலய நாயனார். ஆம் - ஆகும். பொங்கிய-பொங்கி எழுந்த. புகழின்-புகழை; உருபு மயக்கம். மிக்கார்-மிகுதியாகப் பெற்றவர். திருத்தொண்டு. செய்த திருத்தொண்டினை. புகலலுற்றேன்- இனிமேல் பாடத் தொடங்கினேன்.

தம்முடைய கண்ணை இடந்து காளத்தி நாதருடைய திருவிழியில் அப்பியதால் திண்ணனார் கண்ணப்பர் என்ற திருநாமத்தைப் பெற்றார்.

மன்னனார்: “மன்னானவன் உலகிற்கொரு மழை யானவன்.', 'நாகேச்சர நகரின் மன்னே..', 'மன்னன் மூக்கீச்சரத்தடிகள்.’’ என்று திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரும், விமலர் கோனை.', 'அதிகை மூதூர் அரசினை.”, நம்பனே எங்கள் கோவே.', 'கோடிகா உடைய கோவே.’’, 'புகலூர் அரசே.', 'சிவனவன் மன்னவன்.', 'திருக்கோளிலி மன்னனே..', 'முத்தொடு போகமாம் மன்னவன்.', 'மணஞ்சேரி எம்மன்னனார்.', "இளம்பிறை சூடிய மன்னன்., 'மன்னவன்காண் வான வர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான்.', முன்னுருவை வான் பவளக் கொழுந்தை.', 'மன்னானாய் மன்னவர்க் கோரமுதம் ஆனாய்.’’ என்று திருநாவுக்கரசு நாயனாரும், 'மன்னே மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை.”, 'மன்னே மாமணியே., 'அழுந்துார் அரசே.’’, "இமையோர் தொழு கோவே." என்று சுந்தரமூர்த்தி நாயனாரும், 'மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி.', 'காக்கும் எம் காவலனே.', 'கோவார் கோலம் கொண்ட கொள்கையும்.', 'ஆடக மதுரை அரசே போற்றி.', 'அரைசே போற்றி அமுதே போற்றி. ,