பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏனாதி நாத நாயனார்.புராணம் 25。

பிறகு உள்ள 22-ஆம் பாடலின் கருத்து வருமாறு: தோற்றப் பொலிவைப் பெற்ற தங்களுடைய வில்லா யுதங்கள் வளையும் வண்ணம் எதிர்த்துப் போரிட்ட வீரர்கள் புற்றில் வாழும் பாம்புகளைப் போன்ற அம்புகள் தங்கள்மேற் படவும், தாங்கள் கைகளில் ஏந்தியிருந்த வில் என்னும் ஆயுதங்கள் துண்டு படவும் அவர்கள் நின்று கொண்டிருக்கவில்லை; வெற்றியைக் கொள்ளும் உடை. வாட்களை வீசினார்கள் நிறைவுபெற அமைந்த பெரிய செல்வம் இல்லாமலும் தாங்கள் புரிய முற்பட்ட கொடை நிலையாக நிற்க, தங்களுக்கு உள்ள பண்டங்களை இரவலர் களுக்கு வழங்கிய நற்பண்பை உடைய வள்ளல்களை, முட்களைப் போன்ற கொடிய வீரர்கள் சிலர் ஒத்து விளங்கினார்கள். பாடல் வருமாறு: . -

பொற்சிலை வளைய எதிர்ந்தவர் புற்றர

வனைய சரம்பட விற்படை துணியவும் கின்றிலர், வெற்றிகொள்

- சுரிகை வழங்கினர்; முற்றிய பெருவளன் இன்றியும் முற்படு

கொடைநிலை கின்றிட உற்றன. உத்விய பண்பினர் ஒத்தனர் உளர்சில

கண்டகர். ' பொன்-தோற்றப் பொலிவைப் பெற்ற. சிலை-தங்களு. டைய வில்லாயுதங்கள்: ஒருமை பன்மை மயக்கம். வளையவளையும் வண்ணம். எதிர்ந்தவர்-எதிர்த்துப் போரிட்ட வீரர்கள்; ஒருமை புன்மை மயக்கம். புற்று-புற்றில் வாழும். அரவு-பாம்புகளை ஒருமை பன்மை மயக்கம். அணையபோன்ற, சரம்-அம்புகள்; ஒருமை பன்மை மயக்கம். பட தங்கள்மேற் படவும். வில்படை-தாங்கள் கைகளில் ஏத்திக் கொண்டிருந்த வில் என்னும் ஆயுதங்கள்: ஒருமை பன்மை மயக்கம், துணியவும்-துண்டுகளாகப் போகவும். நின்றிலர்அவர்கள் நின்று கொண்டிருக்கவில்லை. வெற்றி கொள் வெற்றியைக் கொள்ளும். சுரிகை-தங்களுடைய உடை வாட்