பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2尘 பெரிய புராண விளக்கம்-4

நேருரம் உருவ உரப்புடன் நேர்பட எதிரெதிர் குத்தினர்; ஆருயிர் கழியவும் நிற்பவர் ஆண்மையில் *

இருவரும் ஒத்தமை போரடு படைகொ டளப்பவர் போல்பவர் -- அளவிலர் பட்டனர். '

கூர்-கூர்மையான. முனை-துணிகளைப் பெற்ற : ஒருமை பன்மை மயக்கம். அயில்-வேலாயுதங்களை ஒருமை பன்மை மயக்கம். கொடு-தங்களுடைய கைகளில் எடுத்துக் கொண்டு. முட்டினர்-ஒரு கட்சியில் உள்ள வீரர்கள் எதிர்க் கட்சியில் இருந்த வீரர்களை மோதினார்கள்; ஒருமை பன்மை மயக்கம். கூடி-அந்தப் போர்க் களத்துக்கு வந்து சேர்ந்து" முன்-முன்பு உருவிய-உருவி எடுத்த. தட்டுடன்-கேடயங் களோடு: ஒருமை பன்மை மயக்கம். நேர்-எதிர்ப்பட்ட. உரம்-எதிர்க் கட்சியில் உள்ள வீரர்களுடைய மார்புகளை: ஒருமை பன்மை மயக்கம். உருவ-ஊடுருவிச் செல்லுமாறு. உரப்புடன்-பலத்தோடு, நேர்பட-நேரில் படுமாறு. எதிர் எதிர்-எதிருக்கு எதிரில். குத்தினர்-ஈட்டிகளால் குத்தினார் கள்; ஒருமை பன்மை மயக்கம். ஆர் உயிர்-சில வீரர் களுடைய அருமையான உயிர்கள்; ஒருமை பன்மை மயக்கம். கழியவும்-போகவும். நிற்பவர்-அவ்வாறு தங்களுடைய உயிர்கள் போகாமல் நின்று கொண்டிருந்த வீரர்கள்: ஒரும்ை பன்மை மயக்கம். ஆண்மையில்-வீரத்தில். இருவரும். இரண்டு கட்சிக்காரர்களும். ஒத்தமை-ஒத்து இருந்தமை யால். போர்-யுத்தத்தில். அடு-கொலை புரியும். படைஆயுதங்களை ஒருமை பன்மை மயக்கம். கொடு-கொண்டு. அளப்பவர்-எதிர்க்கட்சி வீரர்களுடைய ஆற்றலை அளந்து பார்ப்பவர்களை ஒருமை பன்மை மயக்கம். போல்பவர்போல இருந்த வீரர்கள்; ஒருமை பன்மை ம்யக்கம். அளவு இலர்-அளவு இல்லாத பேர்கள்: ஒருமை பன்மை மயக்கம். இலர்: இடைக்குறை. பட்டனர்-இறந்து விழுந்தார்கள்: ஒருமை-பன்மை மயக்கம்.