பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏனாதி நாத நாயனார் புராணம் 23

இரண்டு வீரர்களுக்குள். ஒருவன்-ஒரு வீரன். தொடர்தொடர்ந்து சென்ற தாள் கால்களும்; ஒருமை பன்மை மேயக்கம், இரு-இரண்டு. தொடை-தொடைகளும்; ஒருமை பன்மை மயக்கம். அற-வெட்டுப்பட்டு அற்றுப் போக, முன்முன்னால். பெயர்-நடக்கும். சாரிகை-இடசாரி வலசாரியாக நடந்து. முறைமை-முறைப்படி த டி ந் த ன ன்-வெட்டி விட்டான். வாளொடு-தான் கையில் பிடித்திருந்த வாளா புதத்தோடு, விழும் தரையில் விழும். உடல்-ஒரு வீரனுடைய உடம்பு. வென்றவன்-வென்ற வீரனுடைய, மார்பிடைமார்பில். அற-அறும்படி. முன்-முன்னால், எறிந்திட-வாளை வீச. ஆளியின்-சிங்கத்தைப் போல. அவனும்-வாளால் வெட்டுப்பட்ட அந்த வீரனும், மறிந்தனன்-இறந்து தரையில் விழுந்தான். எங்கணும்-போர்க்களத்தில் எந்த இடங்களி லும்; ஒருமை பன்மை மயக்கம். கணும் இடைக்குறை. 'பலர்-பல வீரர்க்ள், உளர்-இருப்பவர்கள், ஒருமை பன்மை மயக்கம்: இடைக் குறை. ஆயினர்-ஆனார்கள்; ஒருமை பன்மை மயக்கம். - - அடுத்து வரும் 21-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: 'கூர்மையான துணியைக் கொண்ட வேல்களை எடுத்துக் கொண்டு ஒரு வீரரோடு மற்றொரு வீரர் மோதிக் கொண் டார்; சேர்ந்து முன்னால் உருவி எடுத்த கேடயங்களோடு சந்திக்கும் வீரர்களுடைய மார்புகளினூடு உருவிச் செல்லும் வண்ணம் பலத்தோடு நேரில் படுமாறு எதிருக்கு எதிரில் ஈட்டிகளால் குத்தினார்கள் பல வீரர்களுடைய அருமை யான உயிர்கள் போகவும், அவ்வாறு தங்களுடைய உயிர்கள் போகாமல் நின்று கொண்டிருந்த வீரர்கள் வீரத்தில் இரண்டு கட்சிக்காரர்களும் ஒத்து இருந்த பான்மையால் போரில் கொலை புரியும் ஆயுதங்களைக் கொண்டு அளப்ப வர்களைப் போல இருந்த அவர்கள் அளவு இல்லாதவர்கள் இறந்து விழுந்தார்கள். பாடல் வருமாறு:

கூர்முனை அயில்கொடு முட்டினர்; கூடிமுன்

, . உருவிய தட்டுடன்