பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 - பெரிய புராண விளக்கம்-4

பக்கத்தில். சொரி-சொரிந்த. குடர்-குடல்களோடு: ஒருமை பன்மை மயக்கம். உடல்-வெட்டுப்பட்ட வீரர்களினுடைய உடம்புகள்; ஒருமை பன்மை மயக்கம். பம்பின-எங்கும் பரவி விழுந்திருந்தன. வெரு-அச்சம். வர உண்டாகுமாறு. எருவை-பிணந்தின்னிக் கழுகுகள்: ஒருமை பன்மை மயக்கம். நெருங்கின-போர்க்களத்தில் நெருங்கிப் பறந்து கொண் டிருந்தன. விசி-கட்டுதல். அறு-அற்ற துடிகள்-உடுக்குக்கள். புரண்டன-தரையில் புரண்டு கொண்டிருந்தன.

பிறகு உள்ள 20-ஆம் பாடலின் கருத்து வருமாறு: போர்க்களத்தில் நீளமான இடத்தில் வேகமாக நடந்து எதிர்ப்பட்ட இரண்டு வீரர்களில் ஒரு வீரனுடைய தொடர்ந்து சென்ற கால்களும், இரண்டு தொடைகளும் வெட்டுப்பட்டு அற்றுப்போக, முன்னால் நடக்கும் இடசாரி வலசாரியாக நடந்து முறைப்படி வெட்டிவிட்டான்: வெட்டுப்பட்ட ஒரு வீரனுடைய வாளோடு தரையில் விழும் உடம்பு, வென்ற வீரனுடைய மார்பில் அறும்படி முன்னால் வாளை எறியச் சிங்கத்தைப்போல அந்த வீரனும் இறந்து போனான். இவ்வாறு அந்தப் போர்க்களத்தில் எந்த இடங் களிலும் பல வீரர்கள் இருப்பவர்கள் ஆனார்கள். பாடல்

வருமாறு: . . . - . * நீளிடை முடுகி நடந்தெதிர் நேரிரு வரிலொரு

. . . . . வன்தொடர் தாளிரு தொடைஅற முன்பெயர் சாரிகை

- . * -- - - முறைமை தடிந்தனன்; வாளொடு விழும்உடல் வென்றவன் மார்பிடை , ,

• . . . அறமுன் எறிந்திட ஆளியின் அவனும் மறிந்தனன்; ஆயினர் %.

  • . பலருளர் எங்கணும். ! நீள்-அந்தப் போர்க்களத்தில் உள்ள நீளமான, இடைஇடத்தில். முடுகி-வேகமாக. நடந்து எதிர்-நடந்து எதிர்ப் பட்ட எதிரில் வந்த நேர்-நேரில் சந்தித்த, இருவரில்