பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏனாதி நாத நாயனார் புராணம் 21.

கள் வெட்டுப்பட்ட வீரர்களின் குறைந்த உடம்புகளாகிய முண்டங்கள் ஒடி அலைந்து கொண்டிருந்தன; போர் செய்த ஆயுதங்கள் அற்ற துண்டங்கள் தரையில் சிந்தி விழுந்தன; பக்கத்தில் சொரிந்த குடல்களோடு வெட்டுப் பட்ட வீரர்களினுடைய உடம்புகள் எங்கும் பரவி விழுந் திருந்தன; அச்சம் உண்டாகும் வண்ணம் பிணந்தின்னிக் கழுகுகள் போர்க்களத்தில் நெருங்கிப் பறந்து கொண்டிருந் தன. கட்டுக்கள் அற்ற உடுக்குக்கள் தரையில் புரண்டு கொண்டிருந்தன. பாடல் வருமாறு :

குருதியின் நதிகள் பரந்தன; குறைஉடல் ஓடி

அலைந்தன; பொருபடை அறுதுணி சிங்தின; புடைசொரி . - . குடர்உடல் பம்பின; வெருவர எருவை நெருங்கின; விசியறு -

துடிகள் புரண்டன; இருபடை தனினும் எதிர்ந்தவர் எதிரெதிர் -

- - அமர்செய் பறந்தலை. ' இந்தப் பாடலிலும் விற்பூட்டுப் பொருள்கோள் அமைந் திருக்கிறது. இரு படைதனினும்-இரண்டு சேனைகளிலும்; தன் அசைநிலை, எதிர்ந்தவர்-எதிர்த்து நின்ற வீரர்கள்: ஒருமை பன்மை மயக்கம். எதிர் எதிர்-எதிருக்கு எதிரில். அமர்.போர். செய்-புரிந்த, பறந்தலை-போர்க்களத்தில். குருதியின்-வெட்டுப்பட்ட வீரர்களினுடைய உடம்புகளி லிருந்து வழிந்த இரத்தத்தின் நதிகள்-ஆறுகள். பரந்தனபோர்க்களம் முழுவதும் பரவி ஓடின. இரத்தம் மிகுதியாக இருந்தமையினால் ஆற்றைப் போல ஓடின. குறை-தலைகள் வெட்டுப்பட்ட வீரர்களினுடைய குறைந்த உடல்-உடம்பு களாகிய முண்டங்கள்; ஒருமை பன்மை மயக்கம். ஒடிபோர்க்களத்தில் ஒடி. அலைந்தன. அலைந்து கொண்டிருந் தன. பொரு-போர் செய்த படை-ஆயுதங்கள்: ஒருமை பன்மை மயக்கம். அறு-அற்ற, துணி-துண்டங்கள்: ஒருமை பன்மை மயக்கம். சிந்தின.தரையில் சிந்தி விழுந்தன. புடை