பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. பெரிய புராண விளக்கம்-4

இந்தப் பாடலில் விற்பூட்டுப் பொருள் கோள் அமைந் திருக்கிறது. நாளொடு-குறித்த நாளில்; உருபு மயக்கம். சிறி.சிறிக் கொண்டு. மலைப்பவர்-போர் புரியும் வீரர்கள்: ஒருமை பன்மை மயக்கம். நாடிய-நாடி வந்த போர்யுத்தத்தை. செய்-புரிந்த களத்தினில்-போர்க்கள்த்தில். வாளொடு-வாளாயுதங்களோடு; ஒருமை பன்மை மயக்கம். நீள்-நீண்ட கை-வீரர்களின் கைகள்; ஒருமை பன்மை மயக்கம். துடித்தன-துடிப்பை அடைந்தன. மார்பொடுஒரு கட்சியில் இருந்த வீரர்களின் மார்புகளில் உருபு மயக்கம்; ஒருமை பன்ம்ை மயக்கம். வேல்கள் - மறு கட்சி யில் இருந்த வீரர்கள் ஏந்தி யிருந்த வேலாயுதங்கள். குளித்தன-பதிந்து மறைந்தன. தோளொடு-ஒரு கட்சியில் இருந்த வீரர்களினுடைய தோள்களோடு; ஒருமை பன்மை மயக்கம். வாளி-மற்றக் கட்சியில் இருந்த வீரர்கள் எய்த அம்புகள்; ஒருமை பன்மை மயக்கம். நிலத்தன.தரையில் விழுந்தன. தோளொடு-ஒரு கட்சியில் இருந்த வீரர்களினுடைய தோள்களோடு; ஒருமை பன்மை மயக்கம். தோள்கள்-எதிர்க்கட்சியில் இருந்த வீரர்களி னுடைய தோள்கள். தகைத்தன-ஒன்றனோடு ஒன்று மோதிக் கொண்டன. தாளொடு-வீரர்களினுடைய கால் களோடு; ஒருமை பன்மை மயக்கம். வார் - நீளமான. கழல்-வீரக்கழல்கள்: ஒருமை பன்மை மயக்கம். இற்றன. முறிந்து விழுந்தன. தாரொடு - மாலைகளோடு: ஒருமை பன்மை மயக்கம். சூழ் அவற்றைச் சுற்றியிருந்த, சிரம்ஒரு கட்சியில் உள்ள வீரர்களினுடைய தலைகள்: ஒருமை பன்மை பயக்கம். அற்றன-எதிர்க்கட்சியில் இருந்த விரர்கள் எய்த அம்புக்ளால் உடம்புகளிலிருந்து அற்று விழுந்தன.

அடுத்து வரும் 19-ஆம் பாடலின் கருத்து வருமாறு :

இரண்டு சேனைகளிலும் எதிர்த்து நின்ற வீரர்கள் எதிருக்கு எதிரில் போர் புரிந்த போர்க்களத்தில், வெட்டுப் பட்ட வீரர்களுடைய உடம்புகளிலிருந்து வழிந்த இரத்தத் தின் ஆறுகள் போர்க்களம் முழுவதும் பரவி ஓடின. தலை