பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏனாதி நாத நாயனார் புராணம் 19

இல்-இல்லாத சடைக்குறை. சரங்கள்-அம்புகள். நெருங் குவ-நெருங்கி இருப்பவை: பொங்கு-பொங்கி எழுந்த, சினத்து-கோபமாகிய, எரியில் நெருப்பிலிருந்து; உருபு மயக்கம். புகை-எழும் புகை. போகு-செல்கின்ற கொடிக் கள்-கொடிகளை. வளைத்து-வளைத்துக் கொண்டு. எதிர்எதிரில். செம்-சிவந்த. கண்-கண்களில் உள்ள ஒருமை பன்மை மயக்கம். விழி-கருமணிகள்; ஒருமை பன்மை மயக்கம். க் சந்தி. கனல்-நெருப்பை, சிந்திய கக்கின காட்சி, சீறு-சீறி எழுகின்ற. பொறி-நெருப்புப் பொறிகள்: ஒருமை பன்மை மயக்கம். ச் : சந்தி. செலவு-போவதை, ஒத்தன.ஒத்து விளங்கின. .

பிறகு வரும் 18-ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு:

வாளாயுதங்களோடு நீண்ட வீரர்களின் கைகள் துடித்தன; அவர்களுடைய மார்புகளோடு வேலர்யுதங்கள் , பதிந்தன: அவர்களுடைய தோள்களோடு அவற்றிற். பதிந்திருந்த அம்புகள் தரையில் விழுந்தன; அவர்களுடைய தோள்களோடு தோள்கள் மோதிக் கொண்டன: பல வீரர் களுடைய கால்களோடு அவற்றில் பூண்டிருந்த நீண்ட வீரக் கழல்கள் முறிந்து விழுந்தன; மாலைகளோடு அவற்றைச் சுற்றியிருந்த தலைகள் உடம்புகளிலிருந்து அற்று விழுந்தன: இவ்வாறு குறித்த நாளில் சீறிக்கொண்டு போர், புரியும் வீரர்கள் நாடி வந்து யுத்தம் புரிந்த போர்க்களத்தில் நிகழ்ந்தன. பாடல் வருமாறு : . -

வாளொடு நீள்கை துடித்தன; மார்பொடு -

- - வேல்கள் குளித்தன, தோளொடு வாளி நிலத்தன; தோளொடு -

. . " . . . தோள்கள் தகைத்தன: , தாளொடு வார்கழல் இற்றன; தாரொடு

- குழ்சிரம் அற்றன, நாளொடு சீறி மலைப்பவர் நாடிய х -

. 3. போர்செய் களத்தினில்.: