பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குங்குலியக் கலய நாயனார் புராணம்

பெரிய புராணத்தில் கண்ணப்ப நாயனார் புராணத் திற்குப் பிறகு விளங்குவது குங்குலியக் கலய நாயனார் புராணம். அதில் வரும் முதற் பாடலின் கருத்து வருமாறு:

'தனக்கு வாய்ப்பாக அமைந்த நீர் வளத்தினால் உயர்ச்சி யைப் பெற்று நிலைபெற்று விளங்கிய பொன்னியாகிய காவிரியாறு ஒடும் சோழ நாட்டில் பொருந்திய சீர்த்தியைப் பெற்ற வேதியர்கள் வாழும் திருமதிலைக் கொண்ட சிவத். தலம் அலைகள் வீசும் நீரைப் பெற்ற கங்கையாறு தங்கிய நீண்ட சடாபாரத்தைத் தம்முடைய தலையின்மேற் பெற்ற வராகிய, அமிர்தகடேசுவரர் பழங் காலத்தில் தம்முடைய திருத்தொண்டராகிய மார்க்கண்டேயர் மேல் அவருடைய உயிரைக் கொண்டுபோக வந்த யமனைச் சினந்து உதைத்த சிவந்த திருவடியை உடைய அந்த ஈசுவரர் நெடுங்காவ: மாகத் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருப்பதாகிய தலம் திருக்கடவூர் என்பதாகும். பாடல் வருமாறு : .

  • வாய்ந்தநீர் வளத்தால் ஓங்கி மன்னிய பொன்னி - காட்டின்

ஏய்ந்தசீர் மறையோர் வாழும் எயிற்பதி எறிநீர்க்

- கங்கை தோய்ந்தள்ே சடையார் பண்டு தொண்டர்மேல் வந்த

- கூற்றைக். காய்ந்தசே வடியார் டிே இருப்பது கடவூர் ஆகும்.'

வாய்ந்த-தனக்கு வாய்ப்பாக அமைந்த. நீர் வளத்தால்நீர்வளத்தினால். ஓங்கி-உயர்ச்சியைப் பெற்று. மன்னியநிலைபெற்று விளங்கிய. பொன்னி-பொன் கொழிக்கும். காவிரியாறு பாயும் பொன்னி பொன் கொழிக்கும் ”