பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குங்குலியக் கலய நாயனார் புராணம் 317

என வருதலைக் காண்க. நாட்டின்-சோழ வளநாட்டில், ஏய்ந்த-பொருந்திய. சீர்-சீர்த்தியைப் பெற்ற, மறையோர்

வேதியர்கள் ; ஒருமை பன்மை மயக்கம். வாழும்-தங்க ளுடைய வாழ்க்கையை நடத்தும். எயில்-மதில் சூழ்ந்த. பதி-சிவத்தலம். எறி-அலைகள் வீசும். நீர்-புனலைப்

பெற்ற. க்சந்தி, கங்கை-கங்கையாறு. தோய்ந்த-தங்கிய. நீள்-நீளமான, சடையார்-சடாபாரத்தைத் தம்முடைய தலையின்மேற் பெற்றவராகிய அமிர்தகடேசுவரர். பண்டு. பழைய காலத்தில். தொண்டர் மேல்-தம்முடைய திருத். தொண்டராகிய மார்க்கண்டேயரின் மேல். வந்த-அவ ருடைய உயிரைக் கொண்டு போக வந்த கூற்றை-யமனை. க்:சந்தி. காய்ந்த-சினந்து உதைத்த. சேவடியார்-செந். தாமரை மலரைப் போலச் சிவந்த திருவடியை உடைய அந்த ஈசுவரர். நீடி-நெடுங்காலமாக இருப்பது-திருக் கோயில் கொண்டு எழுந்தருளியிருப்பதாகிய தலம். கடவூர்திருக்கடவூர் ஆகும்-என்பது ஆகும். .

திருக்கடவூர் : இது சோழ நாட்டில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவர் அமிர்தகடேசுவரர் : அமுதீசர் ' எனவும் இவர் திருநாமம் வழங்கும். அம்பிகை அபிராமி அம்மை. தீர்த்தங்கள் : சிவகங்கை, அமுத புஷ்கரிணி என்பவை.

இது சீகாழியிலிருந்து தென்கிழக்கில் 14 மைல் தூரத்தில் உள்ளது. மேற்குப் பார்த்த சந்நிதி. இது அட்டவீரட்டங் களில் ஒன்று. மார்க்கண்டேயருக்காகக் கால சம்ஹார மூர்த்தி யமனை உதைத்த தலம். அந்த மூர்த்திக்குத் தனியே ஒரு சந்நிதி இந்தக் கோயிலில் இருக்கிறது. குங்குலியக் கலய நாயனாரும், காரி நாயனாரும் வாழ்ந்து இறைவனை வழி பட்டு முத்தி பெற்ற தலமும் இதுவே. இங்கே எழுந்தருளி யிருக்கும் விநாயகப் பெருமானுடைய திருநாமம் கள்ள வாரணப் பிள்ளையார் என்பது. இந்தத் திருக் கோயிலுக்குள் வில்வாரணியேசுவரர், பாபஹரேசுவரர், புண்ணியவர்த்