பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 18 பெரிய புராண விளக்கம்-4

தனேசுவரர் என்னும் சிவலிங்கப் பெருமான்கள் எழுந்தருளி யிருக்கிறார்கள். இதைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு : -

" சேலினே ரனைய கண்ணார் திறம்விட்டுச் சிவனுக் - Ef; Göf Lj # if_ILI பாலும்நற் றயிர்நெய் யோடு பலபல ஆட்டி என்றும் மாலினைத் தவிரநின்ற மார்க்கண்டர்க் காக அன்று காலனை உதைப்பர் போலும் கடவூர் வீரட்ட

னாரே...'

இந்தத் தலத்தைப்பற்றிக் காந்தார பஞ்சமப் பண்ணில் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு : -

“ சடையுடை யானும் நெய்யாலானும் சரிகோவன

உடையுடை யானும் மையார்ந்த ஒண்கண் உமை

கேள்வனும் கடையுடை நன்னெடு மாடம் ஓங்கும் கடவூர்தனுள் விடையுடை அண்ணலும் வீரட்டானத் -

- தரனல்வனே."

இந்தத் தலத்தைப் பற்றித் திருநேரிசை, திருவிருத்தம், திருக்குறுந்தொகை என்னும் திருப்பதிகங்களைத் திருநாவுக் கரசு நாயனார் பாடியருளியுள்ளார். மேலே காட்டிய, " சேலினேரனைய என்ற தொடக்கத்தை உடைய திரு நேரிசை அந்த நாயனார் பாடியருளியதே. அவர் பாடியருளிய திருக்குறுந்தொகை ஒன்று வருமாறு : - *

மலைக்கொ ளானை மயக்கிய வல்வினை நிலைக்கொளானை நினைப்புறு நெஞ்சமே கொலைக்கை யானையும் கொன்றிடு மாதலால் சலைக்கை யானைகண் டீர்கட ஆரரே.'