பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குங்குலியக் கலய நாயனார் புராணம 3].9

சுந்தரமூர்த்தி நாயனார் நட்டராகப் பண்ணில் இந்தத் தவத்தைப் பற்றிப் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு :

பொடியார் மேனியனே புரி நூல்ஒரு பாற்பொருந்த வடியார் மூவிலைவேல் வளர் கங்கையின் •

- மங்கையொடும் கடியார் கொன்றையனே கடவூர்தனுள்

- வீரட்டத்தெம் அடிகேள் என்அமுதே எனக் கார்துணை நீயலதே." பிறகு வரும் 2-ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு:

செழிப்பைப் பெற்ற திருக்கடவூரில் எல்லாக் காலத்திலும் வயல்கள் எல்லாவற்றிலும் விளைந்த சம்பா நெற் பயிர்கள் ஓங்கி நிற்கும் , வயல்களினுடைய வரப்புக்கள் எல்லாவற்றிலும் சங்குப் பூச்சிகள் உமிழ்ந்த முத்துக்கள் ஒளியை வீசும் , அந்த ஊரின் பக்கங்களில் எல்லாவற்றிலும் அந்தணர்கள் யாகம் புரியும் யாகசாலைகள் விளங்கும் ; அணைகள் எல்லாவற்றிலும் செங்கழுநீர்ச் செடிகளின் தொகுதி காணப்படும் : பாக்கு மரங்கள் வளர்ந்து நிற்கும் காடுகளின்மேல் மேகங்கள் எல்லாம் தவழும் ; அந்தப் பக்கங்களில் வாழும் மக்கள் எல்லோரும் அந்தத் திருக்கடவூரின் சீர்த்தியை வாழ்த்தும் வாழ்த்துக்கள் கேட்கும் ; அந்தத் தலத்தில் வாழும் அந்தணர்கள் புரியும் செயல்கள் ஆகிய தொழில்கள், ஓதல், ஒதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் ஆறே. ஆகும்.' பாடல் வரும்ாறு : . -

வயலெலாம் விளைசெஞ் சாலி, வரம்பெலாம் - - வள்ையின் முத்தம்;

அயலெலாம் வேள்விச் சாலை; அணையெலாம் -

கழுநீர்க் கற்றை, புயலெலாம் கமுகின் காடப் புறமெலாம் அதன்சீர்

- . போற் றல்; செயலெலாம் தொழில்கள் ஆறே, செழுந்திருக் - . . . . கடவூர் என்றும் .'