பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.320 பெரிய புராண விளக்கம்-4

இந்தப் பாடலில் விற்பூட்டுப் பொருள்கோள் அமைந்துள் -ளது. செழும்-செழிப்பைப் பெற்று விளங்கும். திருக்கடவூர்திருக்கடவூரில். என்றும்-எல்லாக் காலத்திலும். வயல்-வயல் கள்; ஒருமை பன்மை மயக்கம். எலாம்-எல்லாவற்றிலும்; இடைக்குறை. விளை-விளைந்த, செஞ்சாலி-சம்பா நெற்பயிர் .கள் ஓங்கி நிற்கும்; ஒருமை பன்மை மயக்கம். வரம்பு-வயல் களினுடைய வரப்புக்கள்; ஒருமை பன்மை மயக்கம், எலாம்எல்லாவற்றிலும்; இடைக்குறை. வளையின்-சங்குப் பூச்சிகள் உமிழ்ந்த ஒருமை பன்மை மயக்கம். முத்தம்-முத்துக்கள் ஒளியை வீசும்; ஒருமை பன்மை மயக்கம். அயல்-அந்த ஊரின் பக்கங்கள், ஒருமை பன்மை மயக்கம். எலாம்-எல்லாவற்றி லும்; இடைக்குறை. வேள்வி-அந்தணர்கள் யாகம் புரியும். ச் சந்தி. சாலை-சாலைகள் விளங்கும்; ஒருமை பன்மை மயக்கம். அணை-அணைகள்; ஒருமை பன்மை மயக்கம், எலாம்-எல்லாவற்றிலும், இடைக்குறை. கழுநீர்-செங்கழு நீர்ச் செடிகளின் ஒருமை பன்மை மயக்கம். க்: சந்தி, கற்றை. தொகுதி காணப்படும். கமுகின்-பாக்கு மரங்கள் வளர்ந்து நிற்கும்; ஒருமை பன்மை மயக்கம். காடு-காடுகளின் மேல்; ஒருமை பன்மை மயக்கம். புயல்-மேகங்கள்; ஒருமை பன்மை மயக்கம். எலாம்-எல்லாம் தவழும்; இடைக்குறை. அப்புறம்அந்தப் பக்கங்களில் வாழும் மக்கள்: இட ஆகுபெயர். புறம்: ஒருமை பன்மை மயக்கம். எலாம்-எல்லோரும் இடைக்குறை. அதன்-அந்தத் திருக்கடவூரினுடைய. சீர் - சீர்த்தியை போற்றல்-வாழ்த்தும் வாழ்த்துக்கள் கேட்கும்; ஒருமை பன்மை மயக்கம். செயல்-அந்தணர்கள் புரியும் செயல்கள்; ஒருமை பன்மை மயக்கம். எலாம்-எல்லாம்; இடைக்குறை. தொழில்கள்-ஆகிய வேலைகள். ஆறே-ஒதல், ஒதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் ஆறே ஆகும். பிறகு உள்ள 3-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'தங்களுடைய உள்ளங்கைகளைக் காட்டிலும் அகலமாக உள்ள மையுண்ட விழிகளைப் பெற்ற இழிகுலப் பெண்களாகிய பள்ளிகள் கூட்டமாகக் கூடிக்கொண்டு