பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குங்குவியக் கலய நாயனார் புராணம் 321 -

கூத்தாடும் இடங்களைப் பெற்ற வயல் ஒவ்வொன்றிலும்

அவர்கள் பாடும் மருதப்பண் அமைந்த இசைப் பாடல்கள்

எழுவனவாகிக் கேட்கும்; வடங்களை உடைய பூணுாலை

அணிந்த மார்புகளைப் பெற்ற வைதிக வேதியர்கள்

செயல்களாகிய சடங்குகளை உடைய இடங்கள் ஒவ்வொன்றி

லும் சாம வேதத்தைக் கானம் செய்யும் பாடல்கள் எழுந்து

கேட்பவையாக விளங்கும். பாடல் வருமாறு:

குடங்கையில் அகன்ற உண்கட் கடைசியர் குழுமி

\ ஆடும்

இடம்படு பண்ணை தோறும் எழுவன மருதம் பாடல்; வடம்புரி முந்நூல் மார்பின் வைதிக மறையோர்

- செய்கைச் சடங்குடை இடங்கள் தோறும் எழுவன சாமம்

- பாடல். '

குடங்கையில்-தங்களுடைய உள் ள ங் கை க ைள க் காட்டிலும் ஒருமை பன்மை மயக்கம். அகன்றஅகலமாக உள்ள உண் - மையுண்ட. கண் - விழி களைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். கடைசியர்இழிகுலப் பெண்களாகிய பள்ளிகள். குழுமி-கூட்ட மாகக் கூடிக்கொண்டு. ஆடும்.கூத்தாடும். இடம்-இடங் களை ஒருமை பன்மை மயக்கம். படு-பெற்ற, பண்ணைவயல். தோறும்-ஒவ்வொன்றிலும். எழுவன-எழுபவையாக. மருதம்-மருதப்பண் அமைந்த. பாடல்-இசைப் பாடல்கள் கேட்கும்; ஒருமை பன்மை மயக்கம். வடம் - வடங்களை: ஒருமை பன்மை மயக்கம். புரி-புரிகளாகப் பெற்ற; ஒருமை பன்மை மயக்கம. முந்நூல்-மூன்று நூல்களாகிய பூணுரலை, நூல்: ஒருமை பன்மை மயக்கம். மார்பின்-அணிந்த மார்பு களை உடைய, ஒருமை பன்மை மயக்கம். வைதிக-வேதம் விதித்தபடி நடக்கும். மறையோர்-வேதியர்கள்; ஒருமை பன்மை மயக்கம். செய்கை-செயல்களாகிய, ஒருமை.பன்மை மயக்கம். ச்: சந்தி. சடங்கு-சடங்குகளை ஒருமை பன்மை மயக்கம். உடை-உடைய இடங்கள் தோறும்-இடங்கள் ஒவ்