பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 பெரிய புராண விளக்கம்-4

வொன்றிலும். சாமம்- சாம வேதத்தைக் கானம் செய்யும். பாடல்-பாடல்கள்: ஒருமை பன்மை மயக்கம். எழுவன. எழுந்து கேட்பவையாக விளங்கும். -

அடுத்து வரும் 4-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: 'துரய்மையாகிய நீளமான கொம்புகளைப் பெற்ற எருமை மாடு முழுகித் தன்னுடைய பாலைப் பொழிந்த வாவியில் சிவந்த நிறத்தைக் கொண்ட கயல் மீன்கள் தாவிப் பாய்ந்து நறுமணத்தைப் பெற்ற செந்தாமரை மலரும், வெண்டாமரை மலரும் அந்த எருமை மாட்டின் இனிய சுவையைப் பெற்ற பாலினுடைய மணத்தை வீசும்; மேகங்கன் தவழும் மாடங்கள் உயர்ந்து நிற்கும் சாலையின் பக்கத்தில் சிறிது வந்து சேரும் மேகங்களும் அந்த இடத்தில் அந்த மேகங்கள் சொரிந்த மழை நீரும் அந்தணர்கள் வளர்க்கும் யாகாக்கினியில் சொரியும் நெய்யாகிய ஆகுதியினால் எழுந்த புகையினுடைய பகுதி நறுமணம் வீசும். பாடல் வருமாறு:

துங்கள்ே மருப்பின் மேதி படிந்துபால் சொரிந்த

- வாவிச் செங்கயல் பாய்ந்து வாசக் கமலமும் தீம்பால் காறும்; மங்குல்தோய் மாடச் சாலை மருங்கிறை ஒதுங்கும்

- மஞ்சும் அங்கவை பொழிந்த நீரும் ஆகுதிப் புகைப்பால் - - காறும்.'"

துங்க-துரய்மை உடைய, நீள்-நீளமான. மருப்பின்கொம்புகளைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். மேதிஎருமை மாடு. படிந்து-முழுகி. பால்-தன்னுடைய மடியி லிருந்து பாலை, சொரிந்த-பொழிந்த, வாவி-வாவியில். 'வாபீ என்ற வட சொல்லின் திரிபு, ச். சந்தி. செம்-சிவந்த நிறத்தைக் கொண்ட, கயல்-கயல் மீன்கள்: ஒருமை பன்மை மயக்கம். பாய்ந்து-துள்ளிக் குதித்துத் தாவி. வாச-நறுமணம் கமழும். க், சந்தி. கமலமும்-செந்தாமரை மலரும் வெண்டா மரை மலரும்; ஒருமை பன்மை மயக்கம். தீம்பால்-அந்த