பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குங்குலியக் கலய நாயனார் புராணம் 325

பிரமதேவனும் பன்றியின் உருவத்தை எடுத்து நிலத்தைத் தோண்டிப் பார்த்தும், அன்னப் பறவையின் வடிவத்தை எடுத்து மேலே பறந்து சென்று தேடிப் பார்த்தும் தெரிந்து கொள்ள முடியாத திருவடிகளையும் திருமுடியையும் கொண்ட திருக்கோலத்தை எடுத்துக் கொண்டு அந்த மார்க்கண்டேயனுக்கு எதிரில் எழுந்தருளி யமனுடைய அருமையான உயிரைப் போக்கியவராகிய அமிர்தகடேசு வரருக்கு நறுமணம் வீசிய குங்குலியத் துனபத்தைத் துப முட்டியில் மிகுதியாகவே நிரம்பித் ததும்புமாறு இடுகின்ற திருப்பணியில் தலை சிறந்து நின்றிருப்பவர் அந்தக் குங்குலி யக் கலய நாயனார். பாடல் வருமாறு : . . . . . . . . . பாலனாம் மறையோன் பற்றப் பயம்கெடுத் தருளும்

- ஆற்றால் மாலும்கான் முகனும் காணா வடிவுகொண்

டெதிரே வந்து காலனார் உயிர்செற் றார்க்குக் கமழ்ந்தகுங் குலியத் - - "... துன்பம் சாலவே நிறைந்து விம்ம இடும்பணி தலைகின்

- - - றுள்ளார்,' ப்ாலன் ஆம்-இளைஞனாக விளங்கும். மறையோன்வேதியனாகிய மார்க்கண்டேயன். பற்ற-தம்மைப் பிடித்து, கொள்ள. ப்: சந்தி. பயம்-அவனுடைய அச்சத்தை. கெடுத்துபோக்கி. அருளும்-தம்முடைய திருவருளை வழங்கும். ஆற்றால்-வழியினால். மாலும்-திருமாலும். நான்முகனும்நான்கு முகங்களைப் படைத்த பிரமதேவனும். முகம்.ஒருமை பன்மை மயக்கம். காணா-பன்றியின் உருவத்தை எடுத்துத் தரையைத் தோண்டிப் பார்த்தும், அன்னப் பறவையின் வடிவத்தை எடுத்து மேலே பறந்து சென்று தேடிப் பார்த்தும் தெரிந்து கொள்ள முடியாத வடிவு-திருவடிகளையும் திரு. முடியையும் கொண்ட திருக்கோலத்தை. கொண்டுஎடுத்துக் கொண்டு. எதிர்-அந்த மார்க்கண்டேயனுக்கு எதிரில், ஏ:அசை நிலை. வந்து-எழுந்தருளி. காலன்