பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குங்குலியக் கலய நாயனார் புராணம் 327

கண்ணைக் கொண்டவனும்; திணை மயக்கம். எம்-அடி யேங்களுடைய இது சேக்கிழார் தம்மையும் குங்குலியக் கலய நாயனாரையும் சேர்த்துச் சொன்னது. பிராற்குதலைவனும் ஆகிய அமிர்தகடேசுவரனுக்கு. ப்: சந்தி. பொங்கு-ததும்புகின்ற. குங்குலியத் தூபம்-குங்குலியத் துTபத்தை. பொலிவு-விளக்கம். உற-உண்டாகும் வண்ணம். ப்: சந்தி, போற்றி-விரும்பி எடுத்து. ச் சந்தி. செல்ல. தம்முடைய வாழ்க்கையை நடத்திக்கொண்டு போக. அங்குஅந்தத் திருக்கடவூரில். அவர்-அந்த அமிர்தகடேசுவரர். அருளினால்-வழங்கிய திருவருளினால். ஏ: அசை நிலை. வறுமை-தரித்திரம். வந்து-குங்குலியக் கலய நாயனாருக்கு வந்து. அடைந்த-சேர்ந்த பின்னும்-பிறகும். தங்கள்தங்களுடைய. நாயகர்க்கு-தலைவராகிய அந்த அமிர்த கடேசுவரருக்கு, த், சந்தி. தாம் என்றது குங்குலியக் கலய நாயனாரை. முன்-முன்பு செய்-புரிந்து வரும். பணிதிருப்பணியை. தவாமை-தவறாமல். உயத்தார்.அந்த நாயனார் செலுத்தி வந்தார். - -

பிறகு வரும் 8-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

இத்தகைய வழியில் குங்குலியக் கலய நாயனார் நடந்து வரும் காலத்தில் அவருக்கு உண்டான வறுமை நெடுங் காலம் இருந்து வந்ததனால் அந்த நாயனார் தம்முடைய நல்ல வயல்கள் முழுவதையும் விற்பனை செய்தும், விரும்பிய வேலைக்காரரை விற்பனை புரிந்தும், நெடுங் காலமாக இருந்த பல செல்வங்கள் ஒழியத் தாம் வாழ்ந்து பழகிய இல்லற வாழ்க்கையில் நிலைபெற்று விளங்கிய அவருடைய உறவினர்களோடு புதல்வர்களும் வருத்தத்தை அடைந்தார்கள். பாடல் வருமாறு: க் -

" இந்நெறி ஒழுகும் நாளில் இலம்பாடு நீடு செல்ல

கன்னிலம் முற்றும் விற்றும் நாடிய அடிமை விற்றும் பன்னெடும் தனங்கள் மாளப் பயில்மனை

- - வாழ்க்கை தன்னில் மன்னிய சுற்றத் தோடு மக்களும் வருந்தி னார்கள்.'