பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குங்குலியக் கலய நாயனார் புராணம் 33g

யாது.எந்த வகையான ஒன்றும்-பண்டம் ஒன்றுகூட. இல்லைஆகி-இல்லாமற் போவதாகி. இரு-இரண்டு. பகல்தினங்கள்: ஒருமை பன்மை மயக்கம். உணவு தாம் உண்ணும் உணவுகள்: ஒருமை பன்மை மயக்கம். மாறி-இல்லாமற் போய். ப்: சந்தி, பேது - மயக்கத்தை உறும்-அடையும். மைந்தரோடும் புதல்வர்களோடும்; ஒருமை பன்மை மயக்கம். பெருகு-பெருகி உள்ள. சுற்றத்தை-உறவினர்களை. நோக்கி-பார்த்து விட்டு, க்: சந்தி. காதல் செய்-காதலைப் புரியும். மனைவியார்-அவருடைய பத்தினியார். தம்-தம் முடைய. கணவனார்-கணவராகிய. கலயனார்-குங்குலியக் கலய நாயனாருடைய கை-கையில். க்: சந்தி. கோது. ஒரு குற்றமும். இல்-இல்லாத கடைக்குறை, மங்கலமங்கலத்தைப் பெற்ற நூல்-நூலில் கோத்திருக்கும். தாலிதங்கத் தாலியை. கொடுத்து-அளித்து. நெல்-இதை விற்று வந்த பணத்தைக் கொண்டு நெற்களை ஒருமை பன்மை, மயக்கம். கொள்ளும்-வாங்கிக் கொண்டு வாருங்கள். என்றார்-என்று கூறினார். - - - - - - -

பிறகு வரும் 10-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

'அந்தச் சமயத்தில் தம்முடைய பத்தினியார் கழற்றிக் கொடுத்த அந்தத் தங்கத் தாவியை எடுத்துக் கொண்டு நெற்களை விலைக்கு வாங்கும் பொருட்டு அந்தக் குங்குலியக் கலய நாயனாரும் செல்ல ஒப்பு இல்லாத குங்குவியத்தை எடுத்துக் கொண்டு ஒரு வியாபாரியும் அவருக்கு எதிரில் வந்து சேர்ந்தான்; அவனைப் பார்த்து, இந்த மூட்டை என்ன?’ என்று கேட்ட குங்குலியக் கலய நாயனாருக்கு அந்த வியாபாரி உள்ள வண்ணம் கூற அதனைக் கேட்டு மூன்று புரிகளைக் கொண்ட வெள்ளையான பூணுரலை அணிந்த மார்பைப் பெற்ற அந்தக் குங்குலியக் கலய நாயனார் தம்முடைய வதனம் மலர்ச்சியை அடைந்து பின்வரும் இந்த வார்த்தைகளைத் திருவாய் மலர்ந்தருளிச் செய்தார். பாடல் வருமாறு: ... . . . . . .” ... : :