பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 பெரிய புராண விளக்கம்-4

  • அப்பொழு ததனைக் கொண்டு நெற்கொள்வான்

அவரும் போக ஒப்பில்குங் குலியம் கொண்டோர் வணிகனும்

  • - எதிர்வந் துற்றான்;. இப்பொதி என்கொல் ? என்றார்க் குள்ளவா - - றியம்பக் கேட்டு:

முப்புரி வெண்ணுரல் மார்பர் முகம்மலர்ங் திதனைச்

  • சொன்னார் .' அப்பொழுது-அந்தச் சமயத்தில். அதனை தம்முடைய பத்தினியார் கழற்றிக் கொடுத்த அந்தத் தங்கத் தாலியை. க்: சந்தி. கொண்டு-எடுத்துக் கொண்டு. நெல்-நெற்களை : ஒருமை பன்மை மயக்கம். கொள்வான்-விலைக்கு வாங்கும் பொருட்டு. அவரும்-அந்தக் குங்குலியக் கலய நாயனாரும். போக-தம்முடைய திருமாளிகையிலிருந்து எழுந்தருள. ஒப்பு:நிகர். இல்-இல்லாத கடைக்குறை. குங்குலியம்குங்குலியத்தை. கொண்டு-ஒரு மாட்டின் மேல் வைத்துக் கொண்டு. ஒர்-ஒரு. வணிகனும்-வியாபாரியும். எதிர்-அந்த நாயனாருக்கு எதிரில். வந்து உற்றான்-வந்து சேர்ந்தான். இப்பொதி-அவனைப் பார்த்து இந்த மூட்டை. என்கொல்என்ன. கொல்: அசை நிலை. என்றார்க்கு-என்று கேட்ட குங்குலியக் கலய நாயனாருக்கு. உள்ளவாறு-அந்த வியாபாரி உள்ள வண்ணம். இயம்ப-கூற. க், சந்தி. கேட்டுஅதைக் கேட்டு. முப்புரி-மூன்று புரிகளைக் கொண்ட, புரி: ஒருமை பன்மை மயக்கம். வெண்-வெண்மையான, நூல்பூணுாலை அணிந்த, மார்பர்-மார்பைக் கொண்ட அந்த நாயனார். முகம்-தம்முடைய வதனம். மலர்ந்து-மலர்ச்சியை அடைந்து. இதனை-பின்வரும் இந்த வார்த்தைகளை, ஒருமை பன்மை மயக்கம். ச்: சந்தி. சொன்னார்-திருவாய். மலர்ந்தருளிச் செய்தார். - -

- - - அடுத்து உள்ள 11-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

"கங்கை யாற்றைத் தம்முடைய தலையின் மேல் உள்ள சிவந்த சட்ாபாரத்தின் மேல் தங்க வைத்த அழகிய