பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குங்குவியக் கலய நாயனார் புராணம் 331;

கண்களைப் பெற்றவராகிய அமிர்தகடேசுவரருடைய பூசைக்கு உரியதான நறுமணம் கமழும் குங்குலியம் இது ஆனால் அடியேன் இன்றைக்கு இதைப் பெறும் பாக் கியத்தை அடைந்தேன்; நல்லதாகிய பாக்கியம் இதற்கு மேல் ஒன்று இருக்கிறதோ? பெறுவதற்கு அரிய பாக்கி யத்தை அடைந்து வைத்துக் கொண்டு வேறாக இனிமேல் பெற்றுக் கொள்ளும் பண்டம் என்ன இருக்கிறது?' என்று அந்தக் குங்குவியக் கலய நாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்து விட்டுத் தம்முடைய திருவுள்ளத்தில் எழுந்த விருப் பத்தோடு சிறந்து விளங்கினார். பாடல் வருமாறு:

ஆறுசெஞ் சடைமேல் வைத்த அங்கணர்

பூசைக் கான

நாறுகுங் குலியம் ஈதேல் கான் இன்று பெற்றேன்;

.* - நல்ல

பேறுமற் றிதன்மேல் உண்டோ? பெறாப்பேறு

- பெற்று வைத்து. வேறினிக் கொள்வ தென்? என்றுரைத்தெழும் - விருப்பின் மிக்கார் .' ஆறு-கங்கையாற்றை. செம்-தம்முடைய தலையின் மேல் உள்ள சிவந்த சடைமேல்-சடாபாரத்தின்மேல். வைத்ததங்க வைத்த அங்கணர்-அழகிய கண்களைப் பெற்றவ ராகிய அமிர்தகடேசுவரருடைய. கண் ஒருமை பன்மை மயக்கம். கணர் இடைக் குறை. பூசைக்கு ஆன-பூசைக்கு உரியதான, நாறு-நறுமணம் கமழும். குங்குலியம்-சாம்பி ராணி. ஈதேல்-இதுவானால், நான்-அடியேன். இன்றுஇன்றைக்கு. பெற்றேன்-இதைப் பெறும் பாக்கியத்தை அடைந்தேன். நல்ல-நல்லதாகிய, பேறு-பாக்கியம். மற்றுவேறாக. இதன்மேல்-இதற்குமேல். உண்டோ-ஒன்று இருக் கிறதோ. பெறா-பெறுவதற்கு அரிய. ப்: சந்தி. பேறு-பாக்கி யத்தை. பெற்று-அடைந்து. வைத்து-வைத்துக்கொண்டு. வேறு-வேறாக. இனி-இனிமேல். க், சந்தி. கொள்வதுபெற்றுக் கொள்ளும் பண்டம், என்-என்ன இருக்கிறது.