பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.333 . . . . பெரிய புராண விளக்கம்-4

என்று-என உரைத்து-அந்தக் குங்குலியக் கலய நாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்து விட்டு. எழும்-தம்முடைய திருவுள்ளத்தில் எழுந்த விருப்பின்-விருப்பத்தோடு: உருபு மயக்கம். மிக்கார்-சிறந்து விளங்கினார்.

அடுத்து உள்ள 12-ம் பாடலின் கருத்து வருமாறு:

குங்குலியக் கலய நாயனார், 'நான் தங்கத்தை அளிக்க நீர் குங்குலியத்தைக் கொடுங்கள்' என அந்த வியாபாரியிடம் திருவாய் மலர்ந்தருளிச் செய்ய அந்த வியாபாரியும், "எந்தப் பொருளைக் கொடுக்க நீர் இசைந் திருக்கிறீர்?' என்று அந்த நாயனாரைக் கேட்க, தம்முடைய பத்தினியார் கழற்றி அளித்த தங்கத் தாலியைக் குங்குலியக் கலய நாயனார் அந்த வியாபாரியிடம் கொடுத்தார்; அன்றைக்கு அந்த வியாபாரி அந்தத் தங்கத் தாலியைப் பெற்றுக் கொண்டு அந்தக் குங்குலிய மூட்டையை அளிக்க அதை வாங்கிக் கொண்டு அங்கே நின்று கொண்டிராதவ ராகி வேகத்தோடு தம்முடைய திருவுள்ளத்தில் நிரம்பி எழுந்த மகிழ்ச்சியோடும் போனார். பாடல் வருமாறு:

பொன்தரத் தாரும் என்று புகன்றிட வணிகன்

- - - x . தானும்

என்தர இசைந்த தென்னத் தாலியைக் கலயர்

- ஈந்தார்;

அன்றவன் அதனை வாங்கி அப்பொதி கொடுப்பக்

கொண்டு

கின்றிலர் விரைந்து சென்றார் நிறைந்தெழு களிப் - னோடும் , '

பொன்-குங்குலியக் கலய நாயனார் நான் தங்கத்தை. தர-உம்மிடம் கொடுக்க, த், சந்தி. தாரும்-நீர் குங்குலி .யத்தைக் கொடுப்பீராக. என்று-என. புகன்றிட-அந்த நாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்ய. வணிகன் தானும்-அந்த வியாபாரியும். தான்: அசை நிலை. என்-நீர் என்ன. தர-என்னிடம் கொடுக்க இசைந்தது-சம்மதித்தது.