பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குங்குலியக் கலய நாயனார் புராணம் 337”

அயர்வு-அயர்ச்சி. உற-உண்டாக, த்:சந்தி. துயிலும்-உறங் கும். போதில்-சமயத்தில். நல்-நல்ல. தவதவத்தைப் புரிந்த. க்சந்தி. கொடி-பூங்கொடியை. அனார்க்கு-போன்றவராகிய அந்த மாதரசியாருக்கு இடைக்குறை. க்சந்தி. கனவிடை சொப்பனத்தில். நாதன்-தலைவனாகிய வீரட்டானேசுவரன். நல்க-திருவாய் மலர்ந்தருளிச் செய்ய, த்:சந்தி. தெற்றெனவிரைவாக. என: இடைக்குறை. உணர்ந்து-உறக்கத்தி லிருந்து விழித்து எழுந்து. செல்வம்-தம்முடைய திருமாளி கையில் வந்து குவிந்திருந்த செல்வத்தை. கண்டபார்த்த. பின்-பிறகு. சிந்தை செய்வார்-அந்தப் பெண்மணியார்

{.

எண்ணுவாரானார்.

அடுத்து உள்ள 16-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு :

'பூங்கொம்பைப் போன்றவராகிய அந்த மாதரசியார் தம்முடைய திருமாளிகையில் எல்லா இடங்களிலும் குறைவு இல்லாத நிறைவோடு பார்க்கும் அழகிய தங்கத்தின் குவி யலும், நெற் குவியலும், அரிசிக் குவியலும் முதலாக இருக்கிற யாவும் எம்பெருமானாகிய வீரட்டானேசுவரன் வழங்கிய திருவருளால் வந்தன ஆகும் என்று எண்ணித் தம்முடைய இரண்டு கைகளையும் தலையின்மேற் குவித்துக் கும்பிட்டு அந்த ஈசுவரனை வாழ்த்தி வணங்கி விட்டுத் தம்முடைய பெருமையைப் பெற்ற கணவராகிய குங்குலியக் கலய நாய னாருக்குத் திருவமுதைச் சமைப்பதற்காகச் சமையலறையை அடைந்தார். பாடல் வருமாறு :

கொம்பனார் இல்லம் எங்கும் குறைவிலா நிறைவிற்

- . . காணும் அம்பொனின் குவையும் கெல்லும் அரிசியும் - - - முதலா புள்ள எம்பிரான் அருளாம் என்றே இருகரம் குவித்துப்

. போற்றித் தம்பெரும் கண்வ னார்க்குத் திருவமு தமைக்கச் - . சார்ந்தார் , '