பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

必岛& ... பெரிய புராண விளக்கம்-4

கொம்பு-பூங்கொம்பை. அனார். போன்றவராகிய அந்த மாதரசியார் இடைக்குறை. இல்லம்-தம்முடைய திருமாளிகையில் எங்கும்-எல்லா இடங்களிலும்; ஒருமை பன்மை மயக்கம். குறைவு இலா-குறைவு இல்லாத இலா: இன்டக்குறை. நிறைவில்-நிறைவோடு உருபு மயக்கம். காணும்-தாம் பார்க்கும். அம்-அழகிய. பொனின்-தங் கத்தின் இடைக்குறை. குவையும்-குவியலும், நெல்லும்நெற் குவியலும், அரிசியும்-அரிசிக் குவியலும். முதலாய்முதலாகி. உள்ள-இருக்கிற பண்டங்களும். அவையாவன: காய்கறிகள், பாத்திரங்கள், மஞ்சட்பொடி, மிளகாய், மிளகு, சீரகம், வெந்தயம், ஏலம், கிராம்பு, வெல்லம், கற் கண்டு, .ால், தயிர், இலைகள் முதலியவை. எம்-அடியேங் களுடைய, என்றது அந்த மாதரசியார் தம்மையும் தம் முடைய கணவராகிய குங்குலியக் கலய நாயனாரையும் சேர்த்துச் சொன்னது. பிரான்-தலைவனாகிய வீரட்டானே சுவரன். அருள்-வழங்கிய திருவருளால். ஆம்-வந்தவை ஆகும். என்று-என எண்ணி. ஏ. அசை நிலை. இரு-தம் முடைய இரண்டு. கரம்-கைகளையும்; ஒருமை பன்மை மயக்கம். குவித்து-தம்முடைய தலையின்மேல் வைத்துக் கும்பிட்டு வணங்கி. ப்: சந்தி. போற்றி-அந்த ஈசுவரரை வாழ்த்தி விட்டு. த், சந்தி. தம்-தம்முடைய பெரும்-பெருமை யைப் பெற்ற கணவனார்க்கு-கணவராகிய குங்குலியக் கலய நாயனார் உண்ணும் பொருட்டு. த், சந்தி. திருவமுதுஆறு சுவைகளைப் பெற்ற திருவமுதை அந்தச் சுவை களாவன: தித்திப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, புளி, கைப்பு, காரம் என்பன. அமைக்க-சமைப்பதற்காக. ச்: சந்தி, சார்ந்தார்-சமையலறையை அடைந்தார்.

பெண்மணிக்குப் பூங்கொடி உவமை:வல்லி நுண்ணிடை

யாள் உமையவள்.', 'வல்லிய நுண்ணிடையாள் உமையாள் விருப்பன் .', 'கொடிபுல்கு மென்சாயல் உமை.', 'கொடி யிலங்கும் இடையாளொடும்.', 'கொடியன சாயலir

ளோடு.', 'பூங்கொடி மடவாள் உமை. என்று திருஞான