பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 பெரிய புராண விளக்கம்-4

காலனைக் காய்ந்த செய்ய காலனார் கலயனா ராம் ஆலும் அன்புடைய சிந்தை அடியவர் அறியும் ஆற்றால் சாலபேசித்தாய்; உன்றன் தடநெடு மனையில் -

- கண்ணிப் பாலின் இன் அடிசில் உண்டு பருவரல் ஒழிக’ என்றார்." காலனை-யமனை. க், சந்தி. காய்ந்த-சினந்து உதைத்த. செய்ய-செந்தாமரை மலரைப் போலச் சிவந்த காலனார். திருவடியை உடைய அமிர்தகடேசுவரர். கலயனாராம்-குங் குலியக் கலய நாயனாராகும். ஆலும்-தொடரும். சிறந்து விளங்கும்' எனலும் ஆம். அன்பு-பக்தியை. உடைய-பெற்ற. சிந்தை-திருவுள்ளத்தைக் கொண்ட அடியவர்-அடியாராகிய

ఢాజా:ూడ - - - - இந்த நாயனார். அறியும்-தெரிந்து கொள்ளும். ஆற்றால்வழியினால், சால-மிகவும். நீ பசித்தாய்-நீ பசியோடு இருக் கிறாய். உன்றன்-உன்னுடைய. தன்: அசைநிலை. தட-விசால மாகிய நெடு-உயரமாக உள்ள. மனையில்-திருமாளிகைக்கு; உருபு மயக்கம். நண்ணி-சென்று. ப்: சந்தி. பாலின்-பாலோடு கல்ந்த இன்-இனிய சுவையைப் பெற்ற, அடிசில் உண்டு. உணவை உண்டு. பருவரல்-உன்னுடைய துன்பத்தை, ஒழிகபோக்கிக் கொள்வாயாக. என்றார்-என்று குங்குலியக் கலய நாயனாரிடம் அந்த ஈசுவரர் திருவாய் மலர்ந்தருளிச் செய்தார். . . -

அடுத்து வரும் 18-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு : குங்குலியக் கலய நாயனார் அமிர்தகடேசுவரர் திருவாய் மலர்ந்தருளிச் செய்த அந்த வார்த்தைகளைக் கேட்டுத் தம்முடைய கைகளைத் தம்முடைய தலையின் மேல் வைத்துக் இங்டடு விட்டுப் பிறகு தரையில் விழுந்து அந்த ஈசுவரரை இனங்கிக் கங்கை யாற்றினுடைய அலைகள் வீசும் நீரைத் தங்க வைத்த தலையை உடையவராகிய அமிர்தகடேசுவரர் திருவாய் மலர்ந்தருளிய வார்த்தைகளை மறுத்துத் தங்கு வதற்கு அச்சத்தை அடைந்து தம்முடைய தலையின்மேல் அவர் இட்ட பணியை ஏற்றுக்கொண்டு சங்கரனாகிய அந்த கவர்னுடைய ஆலயத் தி லி ருந்து வெம்பை ஒத்தி