பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குங்குலியக் கலய நாயனார் புராணம் 325

உயர்ந்து நிற்கும் மாடங்களைப் பெற்ற தெருவுக்குப் பக்கத் தில் உள்ள தம்முடைய திருமாளிகையை அடைந்தார்.’ பாடல் வருமாறு: '

கலையனார் அதனைக் கேளாக் கைதொழு - திறைஞ்சிக் கங்கை அலைபுனற் சென்னி யார் தம் அருள்மறுத் திருக்க . . அஞ்சித் தலைமிசைப் பணிமேற் கொண்டு சங்கரன் கோயில்

கின்று மலைநிகர் மாடி வீதி மருங்குதம் மனையைச்

- சார்ந்தார்.' கலையனார்-குங்குலியக் கலய நாயனார். அதனை. அமிர்தகடேசுவரர் திருவாய் மலர்ந்தருளிச் செய்த அந்த வார்த்தைகளை ஒருமை பன்மை மயக்கம். க், சந்தி. கேளாகேட்டு. க்:சந்தி. கை-தம்முடைய கரங்களை ஒருமை பன்மை மயக்கம். தொழுது-தம்முடைய தலையின்மேல் வைத்துக் கும்பிட்டு. இறைஞ்சி பிறகு தரையில் விழுந்து அந்த

ஈ சு வ ர ைர வ ண ங் கி. க்: சந்தி. கங்கை-கங்கை யாற்றினுடைய அலை அலைகளில் உள்ள ஒருமை பன்மை மயக்கம். புனல்-நீாை. சென்னியார் தம்-தம்முடைய

தலையில் வைத்துக் கொண்ட அந்த ஈசுவரருடைய. தம் : அசை நிலை. அருள்-திருவாய் மலர்ந்தருளிச் செய்த வார்த் தைகளை வினையாலனையும் பெயர். மறுத்து இருக்கமறுத்துவிட்டு இருப்பதற்கு அஞ்சி-அச்சத்தை அடைந்து, த்: சந்தி. தலைமிசை-தம்முடைய தலையின்மேல், ப்: சந்தி. பணி-அந்த ஈசுவரர் இட்ட திருப்பணியை, மேற் கொண்டு. ஏற்றுக் கொண்டு. சங்கரன்-சுகத்தைச் செய்பவனாகிய அமிர்தகடேசுவரனுடைய. கோயில் நின்று-ஆலயத்திலிருந்து. மலை-மலைகளை ஒருமை பன்மை மயக்கம். நிகர்-ஒத்து விளங்கும். மாட-மாடங்கள் ஓங்கி நிற்கும்; ஒருமை பன்மை மயக்கம். வீதி-திருக்கடவூரில் உள்ள ஒரு தெருவின். மருங்குபக்கத்தில் உள்ள. தம்-தம்முடைய மனையை-திருமாளி, கையை, ச்: சந்தி. சார்ந்தார்-அடைந்தார். -