பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 - . . பெரிய புராண விளக்கம்-4

பிறகு வரும் 19-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

'அவ்வாறு தம்முடைய திருமாளிகைக்கு எழுந்தருளி அதற்குள் நுழைந்தவராகிய குங்குலியக் கலய நாயனார் குபேரன் கொண்டு வந்து வைத்திருந்த பெரிய செல்வத்தின் குவியல்கள் நிரம்பி யிருந்த நிதியைப் பார்த்துத் திகைத்து நின்று தம்முடைய அழகிய பத்தினியாரைப் பார்த்து, 'வில்லைப் போன்ற நெற்றியைப் பெற்ற பெண்மணியே, இங்கே உள்ள இந்த விளைவுகள் யாவும் எவ்வாறு வந்தன?’’ என்று கேட்க, 'இருட்டைப் போன்ற திருக்கழுத்தை உடைய வனாகிய எம்பெருமான் வீரட்டானேசுவரன் திருவருள் வழங்க வந்தவ்ை இவை." என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்தார். பாட்ல் வருமாறு: -

1 இல்லத்திற் சென்று புக்கார் இருநிதிக் குவைகள்

- ஆர்ந்த செல்வத்தைக் கண்டு கின்று திருமனை யாரை நோக்கி 'வில்லொத்த நுதலாய், இந்த விளைவெலாம்

- என்கொல் ?’ என்ன அல்லொத்த கண்டன் எம்மான் அருள்தர வந்த

தென்றார்.

இல்லத்தில்-அவ்வாறு தம்முடைய திருமாளிகைக்கு : உருபு மயக்கம். சென்று-எழுந்தருளி. புக்கார்-நுழைந்தவ ராகிய குங்குலியக் கலய நாயனார். இரு-குபேரன் கொண்டு வந்து வைத்திருந்த பெரிய. நிதி-நிதியினுடைய. க், சந்தி. குவைகள்-குவியல்கள். ஆர்ந்த-நிரம்பியிருந்த செல்வத்தைநிதியத்தை. க், சந்தி. கண்டு-பார்த்து. நின்று-திகைத்து நின்று. திரு-தம்முடைய அழகிய ம ைன யா, ைர. பத்தினியாரை. நோக்கி-பார்த்து. வில்-வில்லை. ஒத்தபோன்ற, நுதலாய்-நெற்றியை உடைய பெண்மணியே. இந்த விளைவு-நம்முடைய திருமாளிகையில் காணப்படும் இந்த விளைவுகள்: ஒருமை பன்மை மயக்கம். எலாம்யாவும்: இடைக்குறை. என்கொல்-எவ்வாறு வந்தன.