பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குங்குலியக் கலய நாயனார் புராணம் - 327

கொல்: அசை நிலை. என்ன-என்று அந்த நாயனார் கேட்க. அல்-இரவை. ஒத்த-போன்ற கண்டன்-திருக்கழுத்தைப் பெற்றவனும். எம்மான்-எம் பெருமானுமாகிய வீரட்டே சுவரன். அருள்-திருவருள். தர-வழங்க. வந்தது-வந்தவை இவை; ஒருமை பன்மை மயக்கம். என்றார்-என்று அந்தப் பெண்மணியார் திருவாய் மலர்ந்தருளிச் செய்தார்.

பெண்களின் நெற்றிக்கு வில் உவமை: 'வில்லை யன்ன வாணுதல் வெவள்ளையொர்பாக மாம்.','விற்பொலி துதற் கொடியிடைக் கணிகைமார்.” என்று திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரும், 'சிலையொத்த வாள்துதல்.” என்று நம்பியாண்டார் நம்பியும், 'விற்புரை துதலின் வேற் கண் விளங்கிழை.' என்று சேக்கிழாரும், வில்லேர் துதல் வேல் நெடுங் கண்ணியும்.’’ என்று திருமங்கையாழ்வாரும், 'விற்கொள் வாணுதல் விளங்கிழை இ ள ந் த ளிர் க் கொழுந்தே. (சித்திர கூடப் படலம், 17), "வில்லொக்கும் துதல் என்றாலும்." (மார்சன் வதைப் ப ட ல ம், 74), "சிலைநுதல் அன்னப் போக்கின்...மாதர்." (கிட்கிந்தைப் படலம், 77), "விற்கூடு துதல் திரு. (உருக்காட்டு படலம், 94), 'விற்கடந்த நுதற் சிலர் வீடினார். (இலங்கை எரியூட்டு படலம், 18) என்று கம்பர் பாடியவற்றையும் காண்க. 'விற்கொண்ட வாணுதலாள் வேவி' என்று அவர் பாடிய தனிப் பாடலில் வருவதையும் காண்க.

அடுத்து வரும் 20-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'மின்னலைப் போன்ற இடுப்பைப் பெற்றவளாகிய தம்முடைய மடப்பத்தைப் பெற்ற பத்தினியார் அவ்வாறு சொல்ல மிகுதியாக உள்ள சீர்த்தியைப் பெற்ற குங்குலியக் கலய நாயனார் தம்முடைய திருமாளிகையில் வந்து நிலை பெற்று விளங்கிய பெரிய செல்வத்தினுடைய வளப்பம் மிகுதியாக உள்ள சிறந்த நிலையைப் பார்த்து, 'அடி யேனையும் ஆளாகக் கொள்ளும் இ ய ல் ைப உடையது அடியேனுடைய த ந் ைத ைய ப் போன்றவனும் எம் பெருமானும் பரமேசுவரனும் ஆகிய விரட்டானேசுவரன்