பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 பெரிய புராண விளக்கம்-2

வழங்கிய திருவருள் இருந்தவாறு என்னே !' என எண்ணி அந்த நாயனார் தம்முடைய திருக்கரங்களைத் தம்முடைய தலையின்மேல் வைத்துக் கும்பிட்டு அந்த ஈசுவரனைத் தரையில் விழுந்து வணங்கினார். பாடல் வருமாறு:

மின்னிடை மடவார். கூற மிக்க சீர்க்கலய னார்தாம்

மன்னிய பெரும் செல் வத்து வளம்மலி சிறப்பை

- - நோக்கி:

என்னையும் ஆளும் தன்மைத் தெந்தைஎம் >

- பெருமான் ஈசன் தன்னருள் இருந்த வண்ணம் என்றுகை

- தலைமேற் கொண்டார். *

மின்-மின்னலைப் போன்ற இடை-இடுப்பைப் பெற்ற, மடவார்-மடப்பத்தைக் கொண்ட பெண்மணியாராகிய தம் முடைய பத்தினியார். கூற-அவ்வாறு சொல்ல. மிக்க-மிகுதி யாக உள்ள. சீர்-சீர்த்தியைப் பெற்ற. க்சந்தி. கலயனார் தாம்-குங்குலியக் கலய நாயனார். தாம்: அசை நிலை. மன் னிய-தம்முடைய திருமாளிகையில் வந்து நிலைபெற்று விளங் கிய, பெரும்-பெரியதாகக் குவிந்திருக்கும். செல்வத்து-செல் வத்தினுடைய. வளம்-வளப்பம். மலி-மிகுதியாக உள் ள. சிறப்பை-சிறந்த நிலையை நோக்கி-பார்த்து. என்னையும்ஒன்றுக்கும் பற்றாத அடியேனையும், ஆளும்-ஆளாகக் கொள்ளும். தன்மைத்து-இயல்பை உடையது. எந்தைஅடியேனுடைய தந்தையைப் போன்றவனும் உவம ஆகு பெயர். எம்பெருமான்-எம்பெருமானும். ஈசன்தன் பரமே. சுவரனுமாகிய வீரட்டானேசுவரன், தன்: அசை நிவை. அருள்-வழங்கிய திருவருள். இருந்தவண்ணம்-இருந்தவாறு என்ன ஆச்சரியம் ! என்று-என அந்த நாயனார் எண்ணி. கை-தம்முடைய திருக்கரங்களை ஒருமை பன்மை மயக்கம். தலைமேல்-தம்முடைய சி ரத் தி ன் மே ல், கொண்டார்வைத்துக் கும்பிட்டு அந்த ஈசுவரனை தரையில் விழுந்து, வணங்கினார். -