பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.32 பெரிய புராண விளக்கம்:

நிறைவேற்றிய குங்குலியக் கலய நாயனார் இன்பத்தை, நிறையப் பெற்றார். பாடல் வருமாறு:

பதுமகற் றிருவின் மிக்கார் பரிகலம் திருத்திக்

- 3. கொண்டு. கதுமெனக் கணவ னாரைக் கண்ணுதற் கன்ப

- ரோடும்.

விதிமுறை தீபம் ஏந்தி மேவும் இன் அடிசில் ஊட்ட அதுதுகர்ந் தின்பம் ஆர்ந்தார் அருமறைக் கலய

- னார்தாம் .'

பதும-செந்தாமரை மலரின்மேல் வீற்றிருக்கும். நல்நல்ல. திருவின்-திருமகளைக் காட்டிலும். மிக்கார்-மிக்க அழகைப் பெற்றவரும் குங்குலியக் கலய நாயனாருடைய பத்தினியாருமாகிய பெண்மணியார். பரிகலம்-உண்பதற். குரிய பாத்திரமாகிய நுனி வாழை இலையை திருத்தி: அறுத்து. க், சந்தி. கொண்டு-கொண்டு வந்து, கதுடென. விரைவாக. என: இடைக் குறை. க், சந்தி. கணவனாரை. தம்முடைய கணவராகிய குங்குலியக் கலய நாயனாரை. க்: சந்தி. கண்ணுதற்கு-நெற்றியில் ஒற்றைக் கண்ணைப் பெற்ற வராகிய அமிர்தகடேசுவரருடைய உருபு மயக்கம். அன்ப ரோடும்-பக்தராகிய ஒருவரோடும். விதி-விதித்த முறைமுறைப்படி தீபம்-திருவிளக்கை. ஏந்தி-தம்முடைய கையில் எடுத்துக் கொண்டு வந்து. மேவும்-பொருந்தியிருக்கும். இன்-இனிப்பு, காரம், கைப்பு, உப்பு, புளிப்பு, துவர்ப்பு என்னும் இனிய ஆறு சுவைகளைப் பெற்ற. அடிசில்-உணவை. ஊட்ட-உண்ணுமாறு பரிமாற. அது-அந்த உணவை. நுகர்ந்து-உண்டு. அரு-பொருள் தெரிந்து கொள்வதற்கு அருமையாக உள்ள. மறை-இருக்கு வேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு. வேதங்களையும், அத்தியயனம் செய்து நிறைவேற்றிய, ஒருமை பன்மை மயக்கம். க்: சந்தி. கலயனார்-குங்குலியக் கலய நாயனார். தாம்:ஈற்றசை நிலை. இன்பம்-இன்பத்தை. ஆர்ந்தார்-நிறையப் பெற்றார்.