பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

לא

குங்குலியக் கலய நாயனார் புராணம் 333

அழகிய பெண்மணிக்குத் திருமகள் உவமை. "திருத்திகழ் மலைச் சிறுமி. என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனா ரும், பெருந் திரு இமவான் பெற்ற பெண் கொடி.." என்று திருநாவுக்கரசு நாயனாரும், 'திருவனார் பணிந்தேத்தும் திகழ் திருவாஞ்சியத் துறையும் ஒருவனார்.' என்று சுந்தர மூர்த்தி நாயனாரும், மலையரையன் பொற்பாவை வாணுதலாள் பெண்திருவை.' என்று மாணிக்கவாசகரும், 'திருவின் கருக்குழி.', 'திருவின் வயிற்றினுள்.”, ஆரே திருவின் திருவடி காண்பர்கள்.' என்று திருமூலரும்,

"திகைத்து நின்றனள். திருவினும் பெரியாள்.', 'திருமகள் என்ன நின்ற தேவியார்.', 'திருமகட்கு மேல் விளங்கும். ஒருமகளை.', 'திருவனைய திலகவதியார்.','திருமடந்தை

அவதரித்தாள் என வந்து பொங்கிய பேரழகுமிகப் புனித வதியார் பிறந்தார்.', 'வாசமலர்த் திருவனையார் தமை நோக்கி.", தாமரைத் தவிசில் வைகும் தகைத் திரு என்ன ஏற்றி.’’, ‘அம்புய மலராள் போல்வார்.', செங்க மலத் திருமடந்தை கன்னி நாடாள்.' என்று சேக்கிழாரும், 'திருமகள் போல வளர்த்தேன்.' என்று பெரியாழ்வாரும், "கடிமாமலர்ப்பாவை ஒப்பாள்.','கமலப்பாவை கதிர்முத்த வெண்ணகையாள் கருங்கண் ஆய்ச்சி.','சுரிகுழற்கணிவாய்த் திருவினைப் பிரித்த.; 'திருவிற் பொலிந்த எழிலார் ஆயர்

தம் பிள்ளைகளோடு.’’ என்று திருமங்கை ஆழ்வாரும், 'திருமகள் போலக் கோமகள்போதும் குறிப்பு.', திருமகள் தன்வயின் தெரிந்தனை.', 'திருமகள் போலச் சேயோன் மார் பிற் செல்வம் எய்தற்கு, நோற்ற பாவாய்.”, 'திருமகள் போல ஒருமையின் ஒட்டி..". "இயற்கைத் திருமகள் இவளென எண்ணி.', 'காவலன் மடமகள், பெருமகன்

  • * . r

மார்பிற் பிரியா துறையுமோர், திருமகள் உள்ள.','திருமகட் பரவும் ஒருமகன் போல உரிமைத் தேவி உள்ளகம் நெகிழும், வழிமொழிக் கட்டளை வழிவழி அளைஇ.', 'திருமகட் பேரும் ஒருமையிற் போந்து.,'தாமரைத் தாதகத்துறையும், தீதுதிர் சிறப்பிற்றிரு மகளாயினும், உருவினும் உணர்வினும் ஒப்புமை ஆற்றாத் தெரியிழை அல்குற்றே மொழிக்