பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குங்குல்லியக் கலய நாயனார் புராணம் - 339

களோடு சேர்ந்து நிமிர்த்திப் பார்த்தார். அப்போதும் சிவலிங்கப் பெருமான் நிமிரவில்லை. இந்தச் செய்தியை அறிந்த சோழ மன்னன் தன்னுடைய யானைகளை அழைத்துக் கொண்டு திருப்பனந்தாளுக்கு வந்து, அந்த யானைகளினுடைய துதிக்கைகளில் ச ங் கி லி க ைள க் கொடுத்து ஆடைகளைச் சுற்றியிருந்த சிவலிங்கப் பெரு மானை அந்தச் சங்கிலிகளால் இழுக்கச் செய்தான். அப்பொழுதும் சிவலிங்கப் பெருமான் நிமிரவில்லை. இந்தச் செய்தியைத் திருக்கடவூரில் வாழ்ந்திருந்த குங்குலியக் கலய நாயனார் அறிந்து திருப்பனந்தாளுக்கு எழுந்தருளி வந்தார். சங்கிலிகளை அகற்றிவிட்டு ஒரு மணிக்கயிற்றைச் சிவலிங்கப் பெருமானைச் சுற்றிக் கட்டி அதன் மற்றொரு தலைப்பைத் தம்முடைய கழுத்தில் கட்டிக் கொண்டு, அடியேன் இழுக்கப் போகிறேன். ஒன்று தேவரீர் நிமிர வேண்டும்; அல்லது அடியேனுடைய உயிர் போக வேண்டும்” என்று விண்ணப்பித்து இழுக்கத் தொடங்கினார். சிவலிங்கப் பெருமான் உடனே நிமிர்ந்து நின்றார். தாடகை என்னும் சிறுமி பூசித்ததனால் இந்த ஆலயத்திற்குத் தாடகேச்சுரம் என்னும் திருநாமம் உண்டாயிற்று. திருக்கோயிலில் இரண்டு ஆண் பனமரங்கள் உள்ளன. இந்தத் தலத்தைப் பற்றிய பாசுரம் ஒன்று வருமாறு: -

சூழ்தரு வல்வினையும் உடல்தோன்றிய

பல்பிணியும் பாழ்பட வேண்டுதிரேல் மிக ஏத்துமின் பாய்புனலும் போழிள வெண் மதியும் அனல்பொங்கர வும்புனைந்த தாழ்சடை யான்பனந்தாள் திருத் தாடகை

- - யீச்சரமே .'

இந்தப் பாசுரம் பஞ்சமப்பண்ணில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய திருப்பதிகத்தில் 4-ஆவதாக உள்ளது. அந்தத் திருப்பதிகத்தில் வரும் மற்றொரு பாசுரம் வருமாறு : :