பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.338 பெரிய புராண விளக்கம்-4

கொடுத்து அவற்றை அந்தச் சிவலிங்கப் பெருமானைச் சுற்றிக் கட்டி இழுக்கச் செய்தும். நேர்-நேராக. நில்லாமை. நில்லாமையினால். க், சந்தி. கங்குலும்-இரவிலும். பகலும்பகலிலும். தீரா-தீராத.க் சந்தி. கவலை-மணக்க வலையை. உற்று-அடைந்து. அமுங்கி-வருந்தி, ச் சந்தி. செல்லகாலத்தைக் கடத்த 'தன்னுடைய இராசதானி நகருக்குப் போக எனலும் ஆம். . . . -

திருப்பனந்தாள். இந்தத் தலம் சோழ நாட்டில் உள்ளது. இங்குக் கோயில் கொண்டிருப்பவருடைய திருநாமங்கள் அருணஜடேசுவரர், செஞ்சடையப்பர் என்பவை. அம்பிகை பெரிய நாயகியம்மை. இது கும்பகோணத்துக்கு வடகிழக்கில் பத்து மைல் தூரத்தில் உள்ளது. இங்கே உள்ள ஆல்யத்தின் திருநாமம் தாடகேச்சுரம் என்பது. இந்த ஆலயத்தின் பூசகராகிய சிவாசாரியார் வெளியூருக்குப் போக வேண்டி யிருந்ததனாலும், அவருக்கு ஆண் குழந்தை இல்லாமை யாலும் தம்முடைய புதல்வியாகிய தாடகை என்பவளைப் பூசை செய்யுமாறு கூறிவிட்டுச் சென்றார். அந்தச் சிறுமி இவ்வாறே பூசைக்கு உரிய பண்டங்களை எடுத்துக் கொண்டு கோயிலுக்குச் சென்று பூசை புரியலானாள். அபிடேகம் செய்த பிறகு சிவலிங்கப் பெருமானுக்கு ,ாலையைச் சாத்த எண்ணினாள். சிவலிங்கப் பெருமான் ஆயரமான பீடத்தில் எழுந்தருளியிருந்தமையால் அவள் நிமிர்ந்து அந்த மாலையைச் சாத்த முயன்றபோது அவளு ட்ைய் இடுப்பிலிருந்த பாவாடை நழுவியது. அதை இரண்டு கைகளாலும் இடுக்கிக் கொண்டு மாலையைச் சாத்த முயன்றும் முடியவில்லை. அவளுடைய திருவுள்ளக் கலக்கத்தைக் கண்ட சிவலிங்கப் பெருமான் வளைந்தார். உடனே தாடகை மாலையைச் சாத்தினாள். அவள் தன்னுடைய திருமாளிகைக்குச் சென்று விட்டாள் வளைந்த சிவலிங்கப் பெருமான் நிமிராமல் வளைந்தபடியே இருந் தார். மறுநாள் கோயில் பூசகர் வந்து பார்த்து அஞ்சி நிமிர்த்த முயன்றார்: முடியவில்லை. வேறு அந்தணர்