பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குங்குலியக் கலய நாயனார் புராணம் 337

னென்னும் சிவலிங்கப் பெருமான் நேராக நிமிர்ந்து நிற்கும் நிலைமையைத் தரிசித்துக் கும்பிட்டு வணங்குவதற்கு அந்தக் காலத்தில் சோழ மண்டலத்தை ஆட்சி புரிந்த சோழ மன்னன் பேராவல் பொங்கி எழுந்து தன்னுடைய யானைகள் எல்லாவற்றையும் கொண்டு அந்தச் சிவலிங்கப் பெருமானை நிமிர்த்தச் செய்தும் அந்தப் பெருமான் நேராக நில்லாமை யால் இரவிலும் பகலிலும் தீராத மனக் கவலையை அடைந்து வருத்தத்தைப் பெற்றுக் காலத்தைக் கடத்த." பாடல் வருமாறு: - - - - செங்கண்வெள் ளேற்றின் பாகர் திருப்பனந் தாளில் - ... - - - மேவும் அங்கணன் செம்மை கண்டு கும்பிட அரசன் ஆர்வம் பொங்கித்தன் வேழம் எல்லாம் பூட்டவும் நேர்கில் - - லாமைக்

கங்குலும் பகலும் தீராக் கவலையுற்றமு ங்கிச்

- செல்ல . . இந்தப் பாடலும் குளகம். செம்-சிவந்த. கண்-கண் களைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். வெள். வெள்ளை நிறத்தைக் கொண்ட ஏற்றின் இடப வாகனத்தை. பாகர்-ஒட்டுபவரும். திருப்பனந்தாளில். திருப்பனந்தாள் என்னும் தலத்தில். மேவும்-விரும்பித் திருக் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும். அம்-அழகிய, கணன்-கண்களைப் பெற்றவனும் ஆகிய அருணஜடேசுவரன் என்னும் திருநாமத்தைக் கொண்ட சிவலிங்கப் பெரு மானுடைய. கண்: ஒருமை பன்மை மயக்கம். கணன்: இடைக் குறை. செம்மை-நேராக நிற்கும் நிலைமையை. கண்டு-தரிசித்து. கும்பிட-கும்பிட்டு வணங்க. அரசன் அந்தக் காலத்தில் சோழ மண்டலத்தை ஆட்சி புரிந்த சோழ மன்னன். ஆர்வம்-பேராவல். பொங்கி-பொங்கி எழுந்து. த், சந்தி. தன்-தன்னுடைய வேழம்-யானைகள்: ஒருமை பன்மை மயக்கம். எல்லாம்-எல்லாவற்றையும், பூட்டவும்- அவற்றின் துதிக்கைகளில் சங்கிலிகளைக்

பெ.-4-22 -