பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 : ; , . . . . . . பெரிய LITTIT விளக்கம்-4

குங்குலியக் கலய நாயனார் நெடுங்காலம் வாழ்ந்து இர்த்திய்ைப் பெற்ற உணவையும், நல்ல சுவையைப் பெற்ற செழிப்பான கறிகளையும், தயிரையும், நெய்யையும், பாலையும் ஆகிய இவற்றால் நிரம்பி உண்டாகிய விருப்பம் மிகுதியாக அமைய சிவபெருமானுடைய அடியவர்களுக்கு உதவிவரும் காலத்தில். பாடில் வருமாறு: .

ஊர்தொறும் பலிகொண் டுய்க்கும் ஒருவன தருளி னாலே

பாரினில் ஆர்ந்த செல்வம் உடையராம் பண்பில் டிேச் சீருடை அடிசில் நல்ல செழுங்கறி தயிர்நெய் பாலால் ஆர்தரு காதல் கூர அடியவர்க் குதவும் நாளில்.’

இந்தப் பாடல் குளகம். ஊர்தொறும்-ஒவ்வோர் ஊரிலும். பலி-பிச்சையை. கொண்டு-வாங்கிக் கொண்டு. உய்க்கும்-தன்னுடைய வாழ்க்கையை நடத்தும். ஒருவனதுஒப்பற்றவனாகிய அமிர்தகடேசுவரனுடைய. அருளினால்திருவருளால். ஏ..அசை நிலை. பாரினில்-இந்தப் பூ மண்ட லத்தில். ஆர்ந்த-நிரம்பி அமைந்த. செல்வம்-செல்வத்தை, உடையர்-பெற்றவர். ஆம் ஆகும். பண்பில்-நல்ல குணத் தோடு; உருபு மயக்கம். நீடி-குங்குலியக் கலய நாயனார் நெடுங் காலம் வாழ்ந்து. ச் சந்தி. சீர்-சீர்த்தியை, உடை. பெற்ற அடிசில்-உணவு. நல்ல-இனிய சுவையைப் பெற்ற நல்ல. செழும்-செழிப்புள்ள. கறி-கறிகள். நெய்-புத்துருக்கு நெய். பாலால்-பசுமாட்டினுடைய பாலோடு உருபு மயக்கம். ஆர்தரு-நிரம்பியுள்ள. காதல்-விருப்பம். கூர-மிகுதியாக அமைய அடியவர்க்கு-சிவபெருமானுடைய அடி ய வ ர் களுக்கு ஒருமை பன்மை மயக்கம், உதவும்-வழங்கி வரும். நாளில்-காலத்தில். - -

அடுத்து வரும் 23-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

'சிவந்த கண்கள்ைப் பெற்ற வெள்ளை நிறத்தைக் கொண்ட இடப வாகனத்தை ஒட்டுபவனும்,திருப்பனந்தாள் என்னும் தலத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவனும், அழகிய கண்களை உடையவனுமாகிய அருணஜடேசுவர