பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குங்குலியக் கலய நாயனார் புராணம் 335.

வரவு.', 'திருவிங்கு வருவாள் கொப்லோ.', 'மலர்மாமகள் ஈண்டிருக்கும் நல்லாள்.', 'தாமரை உறையும் நங்கை இவரென நெருநல் நடந்தவரோ தாம்.' (சூர்ப்பணகைப் படலம், 38,59,88,119), தாமரை தவிரப் போந்தாள் மின்வயின் மருங்குல் கொண்டாள்.', 'செந்திரு ஒப்பார் எத்தனையோர் நின்திரு உண்பார்.” (மாரீசன் வதைப் படலம், 67,181), 'சேயிதழ்த் தாமரைச் சேக்கை தீர்ந்திவண், மேயவள். (சடாயு உயிர்நீத்த படலம்,29), "திருமகள் அனைய அத் தெய்வக் கற்பினாள்.' (கலன் காண் படலம், 13), "தாமரை மறந்த தையல் உருவினைக் காட்டி.' (கார்காலப் படலம்,6), "இலங்கையில் அத் திருவைக் கண்டனன். (ஊர்தேடு படலம்,2321,'திருமகள் இருந்த திசையறிந்து.' (நிந்தனைப் படலம், 19), முளரி நீங்கிய தையலை நோக்கிய தலையன்." (திருவடி தொழுத படலம்,55), 'திருமகளைத் தேவர்க்கும் தெரிவரிய தெய்வக் கற்பின், பேர் மகளை.' (இராவணன் வதைப் படலம், 226), திருவினை அல்குற்கேற்ப மேகலை தழுவச்சேர்த் தார்.', 'திருவினை நிலத்தேடேந்தித் தென்றிசை இலங்கை புக்கான். (மீட்சிப் படலம், 2,84), பூ மலர்த்தவிசை நீத்துப் பொன்மதில் மிதிலை பூத்த, தேமொழித் திருவை.' (விடை கொடுத்த படலம்,22) என்று கம்பரும் பாடியருளிய வற்றையும், புண்டரிகமாதோ புனமயிலோ பொற் கொடியோ.', 'கோகனக மாதனைய கொம்பு." (திக்கு விசயப்படலம்,151, 169), "கஞ்ச மலராளனைய காமினி", 'சீதை என்னுமத் திருவை '’ (அசுவமேத யாகப் படலம், 65, 222) என்று உத்தர காண்டத்தில் வருவனவற்றையும் காண்க. -

பிறகு வரும் 22-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு : ஒவ்வோர் ஊரிலும் பிச்சையை வாங்கித் தன்னுடைய வாழ்க்கையை நடத்தும் ஒப்பற்றவனாகிய அமிர்தகடேசு வரன் வழங்கிய திருவருளினால் இந்த உலகத்தில் நிரம்பிய செல்வத்தைப் பெற்றவராக விளங்கும் நல்ல குணத்தோடு