பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குங்குலியக் கலய நாயனார் புராணம் 349

ஜடேசுவரனுக்குப் பொருந்திய திருப்பணிகளையும் வேறாக இருப்பவற்றையும் புரிந்து நிலைத்து நின்ற வெண்கொற்றக் குடையை ஏந்திய சோழ அரசன் திருப்பனந்தாளை விட்டு அகன்று செல்லவும் ஒப்பு இல்லாத பக்தராகிய குங்குலியக் கலய நாயனார் சிதம்பரம் ஆலயத்தில் விளங்கும் திருச்சிற்றம்பலத்தில் திருநடனம் புரிந்தருளும் வெற்றிக் கழலைப் பூண்ட செந்தாமரை மலர்களைப் போன்ற திரு. வடிகளை வாழ்த்திக் கொண்டு அந்தச் சிதம்பரத்தில் தங்கிக் கொண்டு.” பாடல் வருமாறு:

என்றுமெய்த் தொண்டர் தம்மை ஏத்தியங்

- கெம்பி ரானுக் கொன்றிய பணிகள் மற்றும் உள்ளன பலவும் செய்து கின்றவெண் கவிகை மன்னன் நீங்கவும் கிகளில்

அன்பர் மன்றிடை ஆடல் செய்யும் மலர்க்கழல்

வாழ்த்தி வைகி."

இந்தப் பாடல் குளகம். என்று-என இவ்வாறு. மெய்- உண்மையான த்: சந்தி. .ெ த ா ண் டர் த ம் ைம-திருத்தொண்டராகிய குங்குலியக் கலய நாய னாரை. தம்: அசை நிலை. ஏத்தி-துதித்துவிட்டு. அங்குஅந்தத் திருப்பனந்தாளில். எம்பிரானுக்கு அடியேங் களுடைய தலைவனாகிய அருணஜடேசுவரனுக்கு. இது சேக்கிழார் தம்மையும் குங்குலியக் கலய நாயனாரையும் சேர்த்துச் சொன்னது. ஒன்றிய-பொருத்தமாக உள்ள. பணிகள்-திருப்பணிகளையும், மற்றும்-வேறாக உள்ளவை யாகும். பலவும்-பல செயல்களையும். செய்து-புரிந்து. என்றது இறையிலி நிலம் விடுதல், பூசைக்குரிய அடிக்கும் மணி, து பக்கால், கற்பூரத்தட்டு, பொற்குடம், திருவிளக் குக்கள் முதலியவற்றை. நின்ற-நிலைபெற்று விளங்கிய. வெண்கவிகை-வெண்கொற்றக் குடையைப் பிடித்த, மன்னன்-சோழ் அரசன். நீங்கவும்-திருப்பனந்தாளை விட்டு அகன்று செல்லவும். நிகர்-தமக்கு ஒப்பு. இல்-இல்லாத,