பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 - - பெரிய புராண விளக்கம்-4

செந்தாமரை மலர்களைப் போன்ற திருவடிகள் இரண்டை யும் வேறு யார் நற்குணங்களைப் பெற்ற சிவ பெரு மானுடைய அடியவர்கள் அல்லாமல் அன்பு கொண்டு நேராக நிற்குமாறு செய்ய வல்லவர் ?’ பாடல் வருமாறு :

விண்பயில் புரங்கள் வேவ வைதிகத் தேரில் மேருத்

திண்சிலை குனிய கின்றார் செங்கிலை காணச்

. - செய்தீர்;

மண்பகிர்ந் தவனும் காணா மலரடி இரண்டும் யாரே பண்புடை அடியார் அல்லால் பரிந்துநேர் காண

. வல்லார் .'

விண்-ஆகாயத்தில். பயில்-பறந்த புரங்கள்-மூன்று புரங்களாகிய பறக்கும் கோட்டைகளை. வேவ-எரியும் வண்ணம். வைதிகத்தேரில்-வேதமாகிய இரதத்தில், மேரு. மேருமலையாகிய, த்: சந்தி. திண்-உறுதியான. சிலை-வில். குனிய-வளைய. நின்றார்-நின்றவராகிய அருணஜடே சுவரர். செந்நிலை-நேராக நிமிர்ந்து நிற்கும் நிலையை, காண-யாவரும் தரிசிக்குமாறு. ச் சந்தி. செய்தீர்-தாங்கள் புரிந்தீர்கள். மண்-மண்ணுலகத்தை. பகிர்ந்தவனும். தோண்டிப் பார்த்த திருமாலும்,கானா-தேடியும் பார்க்க முடியாத மலர்-செந்தாமரை மலர்களைப் போன்ற; ஒருமை பன்மை மயக்கம். அடி-திருவடிகள் ஒருமை பன்மை மயக்கம். இரண்டும்-இரண்டையும். யார்-வேறு எவர். ஏ: அசை நிலை. பண்பு-நல்ல குணங்களை ஒருமை பன்மை மயக்கம். உடைபெற்ற அடியார்-அடியவர்கள்; ஒருமை பன்மை மயக்கம். அல்லால்-அல்லாமல். பரிந்து-அன்பு கொண்டு. நேர்காண-நேராக நிற்குமாறு செய்ய வல்லார்

āpl © © Ꭷal fᎢ . .

அடுத்து வரும் 81-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

என இவ்வாறு உண்மையான திருத்தொண்டராகிய

குங்குலியக் கலய நாயனாரைத் துதித்துவிட்டு அந்தத் திருப் பனந்தாளில் அடியேங்களுடைய தலைவனாகிய அருண