பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குங்குலியக் கலய நாயனார் புராணம் - 347

கார்பெறு கானம் போலக் களித்தன; கைகள் கூப்பி வார்கழல் வேந்தன் தொண்டர் மலரடி தலைமேல்

+. வைத்து.'

இந்தப் பாடல் குளகம். பார்மிசை-தரையின்மேல். - நெருங்க-செரியுமாறு. எங்கும்-எல்லா இடங்களிலும்;ஒருமை பன்மை மயக்கம். பயில்.மேவிய. பூமாரி-மலர் மழையை. பரப்பினர்-திருக்கடவூரில் வாழும் மக்கள் பரவலாக விழும் வண்ணம் செய்தார்கள்; ஒருமை பன்மை மயக்கம். தேர்தேரையும். மலி-மிக்க. தானை-சேனையையும் பெற்ற. மன்னன்.சோழ அரசனுடைய சேனையும்-படைவீரர்களும்; திணை மயக்கம், களிறும்-ஆண் யானைகளும்; ஒருமை. பன்மை மயக்கம். எல்லாம்-ஆகிய யாவும். கார்-மேகம் பொழியும் மழையை ஆகு பெயர். பெறு-பெற்ற, கானம் போல-காட்டைப் போல. க்: சந்தி. களித்தன-மகிழ்ச்சியை அடைந்தன. கைகள்-தன்னுடைய கரங்களை கூப்பிதன்னுடைய தலையின்மேல் வைத்துக் கும்பிட்டு. வார்நீண்ட கழல்-வெற்றிக் கழலைப் பூண்ட திருவடிகளை உடைய ஆகு பெயர். வேந்தன்-சோழ மன்னன். தொண்டர். திருத்தொண்டராகிய குங்குலியக் கலய நாயனாருடைய். மலர்-செந்தாமரை மலர்களைப் போன்ற ஒருமை பன்மை மயக்கம். அடி-திருவடிகளை ஒருமை பன்மை மயக்கம். தலைமேல்-தன்னுடைய தலையின் மேல். வைத்து-வைத்துக் கொண்டு கும்பிட்டு. - -

பிறகு உள்ள 30-வது பாடல் சோழ மன்னன் கூறியதைச் சொல்வது. அதன் உள்ளுறை வருமாறு:

ஆகாயத்தில் பறந்த மூன்று புரங்களாகிய பறக்கும் கோட்டைகளை எரியும் வண்ணம் வேதமாகிய இரதத்தில் மேருமலையாகிய உறுதியான வில் வளைய நின்றவராகிய அருணஜடேசுவரர் நேராக் நிற்கும் நிலையை யாவரும் தரிசிக்குமாறு தாங்கள் புரிந்தீர்கள்: மண்ணுலகத்தை அகழ்ந்து பார்த்த திருமாலும் தேடியும் பார்க்க முடியாத