பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 - பெரிய புராண விளக்கம்-4

பெற்றார்-பெறும் பாக்கியத்தைக் குங்குலியக் கலய நாயனார் அடைந்தார். . .

அடுத்து உள்ள 34-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

- கரும்பு வில்லை ஏந்திய காமனையும், யமனையும் சினந்து தண்டித்தவராகிய அமிர்தகடேசுவரர் திருக் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் திருக்கடவூரில் குங்குலியக் கலய நாயனார் நிலைபெற்றுப் பல காலம் வாழ்ந்திருந்து விருப்பத்தை அடையும் பக்தி மேலும் மேலும் மிகுதியாகப் பொங்கி எழும் விருப்பம் மிகுதியாக - உண்டாக ஒருமைப் பாட்டைப் பெற்று வி ள ங் கு ம் திருவுள்ளப்பான்மை இருந்தமையினால் தமக்கு அமைந்த திருப்பணிகள் பலவற்றையும் புரிந்து இறுதியில் சிவபெரு மானுடைய திருவடிகளின் நிழலை அடைந்தார். பாடல் வருமாறு:

. கருப்புவில் லோனைக் கூற்றைக் காய்ந்தவர் கடவூர்

-- - மன்னி விருப்புறும் அன்பு மேன்மேல் மிக்கெழும் வேட்கை கூர ஒருப்படும் உள்ளத் தன்மை உண்மையால் தமக்கு . * . நேர்ந்த திருப்பணி பலவும் செய்து சிவபத நிழலிற் - * . சேர்ந்தார் .'

கருப்பு வில்லோனை-கரும்புவில்லை ஏந்திய காம னையும். க்:சந்தி. கூற்றை-யமனையும். க்: சந்தி. காய்ந் தவர்-எரித்தவரும் தம்முடைய திருவடியால் உதைத்த வரும் ஆகிய அமிர்தகடேசுவரர் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும். கடவூர்-திருக்கடவூரில். மன்னிகுங்குலியக் கலய நாயனார் நிலைபெற்றுப் பல காலம் வாழ்ந்திருந்து. விருப்பு-விருப்பத்தை உறும்-அடையும். அன்பு-பக்தி. மேன்மேல்.மேலும் மேலும். மிக்கு எழும்மிகுதியாகப் பொங்கி எழும். வேட்கை-விருப்பம், கூரமிகுதியாக உண்டாக ஒருப்படும்-ஒருமைப் பாட்டைப்