பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குங்குலியக் கலய நாயனார் புராணம் 355

கடேசுவரருடைய திருவருளையும் பெறும் பாக்கியத்தைக் குங்குலியக் கலய நாயனார் அடைந்தார். பா ட ல், aւյCԱ;ւբո Այ :

மாறிலா மகிழ்ச்சி பொங்க எதிர்கொண்டு மனையில்

- - எய்தி ஈறிலா அன்பின் மிக்கார்க் கின்னமு தேற்கும் ஆற்றால் ஆறுகற் சுவைகள் ஓங்க அமைத்தவர் அருளே அன்றி

ங்ாறுபூங் கொன்றை வேணி கம்பர்தம் அருளும்

புெற்றார் .”

மாறு-ஒப்பு. இலா-இல்லாத இடைக்குறை. மகிழ்ச்சி. களிப்பு. பொங்க-பொங்கி எழ. எதிர்கொண்டு-திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரையும் திருநாவுக்கரசு நாய னாரையும் குங்குலியக் கலய நாயனார் அவர்களுடைய எதிரிற் சென்று வரவேற்று அவர்களை அழைத்துக் கொண்டு. மனையில்-தம்முடைய திருமாளிகையை உருபு மயக்கம். எய்தி-அடைந்து. ஈறு-முடிவு. இலா-இல்லாத, இடைக்குறை. அன்பில்-பக்தியில். மிக்கார்க்கு-சிறந்து நிற்பவர்களாகிய அந்த இரண்டு நாயன்மார்களுக்கும்; ஒருமை பன்மை மயக்கம். இன்-இனிய அமுது-திருவமுதை. ஏற்கும்.தக்கதாக விளங்கும். ஆற்றால்-வழியோடு; உருபு மயக்கம். ஆறு நற்சுவைகள்-இனிப்பு, புளிப்பு, காரம், உப்பு, துவர்ப்பு, கசப்பு என்னும் ஆறு நல்ல சுவைகள். ஓங்க-சிறந்து அமைய அமைத்து-படைத்து. அவர்-அந்த இரண்டு நாயன்மார்களும் வழங்கிய ஒருமை பன்மை மயக்கம். அருள்-திருவருளை. ஏ: அசை நிலை. அன்றி. அல்லாமல். நாறு-நறுமணம் கமழும். பூங்கொன்றைமலர் மாலையை அணிந்த; ஆகு ப்ெயர். வேணி-சடாபாரத்தைக் கொண்ட. நம்பர்தம்-தம்முடைய அடியவர்களுக்குப் பலவகையான நம்பிக்கைகளை உண்டாக்குபவராகிய, அமிர்தகடேசுவரருடைய. தம்: அசை நிலை. அந்த நம்பிக் கைகள் இன்ன என்பதை வேறு ஓரிடத்தில் கூறினோம்: ஆண்டுக் கண்டுணர்க. அருளும் தி ரு வ ரு ைள யும்.