பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.358 - பெரிய புராண விளக்கம்-4

என்று சுந்தரமூர்த்தி நாயனாரும், 'காமன் உடல்...துாய் மைகள் செய்தவா...' என்று மாணிக்கவாசகரும், வேள் இவர் மிகை செகுத்தோன்.' என்று சேந்தனாரும், மன்ம தனைச் செற்றவனே." என்று சேரமான் பெருமாள் நாயனாரும், கோத்த மலர்வாளி கொண்டனங்கன் காளத்திக், கூத்தன் மேல் அன்று குறித் தெய்யப்-பார்த் தலுமே, பண்பொழியாக் கோபத்திச் சுற்றுதலும் பற்றற்று, வெண்பொடியாய் வீழ்ந்திலனோ வெந்து.,

"தீங்கருப்பு வில்லிக்குக் கூற்றானான்.', "ஐங்கணை யவனொடு காலனை அடர்த்தனை.', 'கடிபடு பூங்கணைக் காமனார் உடல் பொடிபட விழித்தும்.', 'மலர்க்

கணையேன் றொட்டிய அக்காம்ன் அழகழித்த கண் போற்றி.' என்று நக்கீரதேவ நாயனாரும், கருப்புச் சிலை அனங்கன் கட்டழகு சுட்ட, நெருப்புத் திருநெற்றி நாட்டம்.' என்று கபிலதேவ நாயனாரும், கண் திறந்து காய் எரியின் வீழ்ந்து கடிதோடிக், கண்டிறந்து காமன் பொடியாக. என்று பரணதேவ நாயனாரும், பூமென் கரும்பொடு பொடிபட நிலத்துக் காமனைப் பார்த்த கண்ணுதல் போற்றி.', 'நெற்றியிற் சிறந்த ஒற்றை நாட்டத்துக், காமனை விழித்த மாமுது தலைவ.', நோக்கிற்றுக் காமன் உடல் பொடியாக.', 'கண்ணாற் காமனைக் காய்ந்தனை.', 'அஞ்சரத்தான் பொடியாய் விழத் தீ விழித்து.', 'பூங்கணை வேளைப் பொடிபட விழித்ததும்.’’ என்று பட்டினத்துப் பிள்ளையாரும், "மன்மதன் மெய்யுரைக்கில் இட்டம் கரியனல்லா னல்லன் அம்பலத் தெம்பரன்மேற் கட்டங்கியகணை எய்தலும் தன்னைப் பொன்னார் முடிமேற் புட்டங்கினான் மகனா மென்று பார்க்கப் பொடிந்தனனே..' என்று நம்பியாண்டார் நம்பியும், 'தம் திருக்கண் எரிதழலிற்பட்டு வெந்தகாமன்.' என்று சேக்கிழாரும் பாடியருளியவற்றைக் காண்க.

பிறகு உள்ள 35-ஆம் பாடல் இந்தப் புராணத்தின் இறுதிப் பாடலாக அமைந்துள்ளது. அதன் கருத்து வருமாறு: