பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குங்குலியக் கலய நாயனார் புராணம் 359

தேன் ஒழுகும் மாலையை அணிந்த விருப்பம் மருவிய தம்முடைய பத்தினியார் கழற்றித் தந்த அழகிய நீளமான தங்கத் தாலியை விற்று விட்டு, வளைவைக் கொண்ட குளிர்ச்சியை உடைய பிறைச் சந்திரனைத் தம்முடைய தலையின்மேல் அணிந்தவராகிய அமிர்தகடேசுவரருக்குக் குங்குலியத்தை எடுத்துக் கொண்டு சென்று புகைத்த தன்மையைப் பெற்றவரும், திருவுள்ளத்தில் உறுதியைக் கொண்டவருமாகிய குங்குலியக் கலய நாயனாரை வணங்கி விட்டு அந்த நாயனாருடைய திருவருளினால் மானக் கஞ்சாற நாயனாருடைய மிகுதியாக அமைந்த வண்மையையும் புகழையும் துதித்துப் பாடத் தொடங்கினேன். பாடல் வருமாறு:

  • தேன்.நக்க கோதை மாதர் திருநெடும் தாலி மாறிக்

கூனற்றண் பிறையி னார்க்குக் குங்குலி யங்கொண்

- டுய்த்த பான்மைத்திண் கலய னாரைப் பணிந்தவர் அருளி

னாலே

மானக்கஞ் சாறர் மிக்க வண்புகழ் வழுத்த லுற்றேன்.'

இது சேக்கிழார் அடுத்து வரும் மானக் கஞ்சாற தாயனார் புராணத்திற்குத் தோற்றுவாயாகப் பாடியருளிய பாடல். தேன் நக்க-தேன் ஒழுகும். கோதை-மாலையை அணிந்த மாதர்-விருப்பம் மருவிய தம்முடைய பத்தினியார். திரு-கழற்றி அளித்த அழகிய, நெடும்-நீளமாக இருக்கும். தாலி-தங்கத் தாலியை. மாறி-விற்று விட்டு. க், சந்தி. கனல்-வளைவையும். தண்-குளிர்ச்சியையும் பெற்ற. பிறை யினார்க்கு-பிறைச் சந்திரனைத் தம்முடைய தலையின் மேல் அணிந்தவராகிய அமிர்தகடேசுவரருக்கு. க், சந்தி. குங்குவியம்-குங்குலியத்தை. கொண்டு-எடுத்துக் கொண்டு சென்று. உய்த்த-புகைத்த. பான்மை-தன்மையையும். த்: சந்தி. திண்-திருவுள்ளத்தில் உறுதியையும் கொண்ட. கலயனாரை-குங்குலியக் கலய நாயனாரை. ப்: சந்தி.