பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

忍6& - பெரிய புராண விளக்கம்-4

சாத்திரங்கள் கூறும்; ஒருமை பன்மை மயக்கம். ஆறுவழியை. நன்கு-நன்றாக, உணர்வார்தாம்-தெரிந்து கொள் பவர்களாகிய புலவர்கள்: ஒருமை பன்மை மயக்கம். தாம்: அசை நிலை. பாடும்-பல பாடல்களைப் பாடி வருணிக்கும். நோன்மையது-சிறப்பைப் பெற்றது. கோல்-பூங் கொம்பு களின்; ஒருமை பன்மை மயக்கம். ஆறு-வழியே. தேன் பொழிய-தேன் சொரிய. க்: சந்தி. கொழும்-கொழுமையாக வி ள ங் கு ம். கனியின்-பல வகையான பழங்களிலிருந்து: ஒருமை பன்மை மயக்கம். அந்தப் பழங்களாவன: மாம் பழங்கள், விளாம் பழங்கள் முதலியவை. சாறு ஒழுகும்சாறு வழிந்து தரையில் ஒடும். காலாறு-கால்வாய்களின் வழியே ஒருமை பன்மை மயக்கம். வயல்-நீர் பாயும் வயல் களையும்; ஒருமை பன்மை மயக்கம். கரும்பின்-கரும்புச் செடிகளையும்; ஒருமை பன்மை மயக்கம். கமழ்-அவற்றின் சாறு நறுமணம் கமழும். சாறு தேர் விழா, திருவாதிரை விழா முதலிய விழாக்கள் நடைபெறும்; ஒருமை பன்மை மயக்கம். ஊர்-திருத்தலம். கஞ்சாறுரர்-கஞ்சாறுார் என்பது ஆகும். -

பிறகு வரும் 2-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு : 'கருமையான கண்களைப் பெற்ற இழிகுலப் பெண் களாகிய பள்ளிகள் எடுக்கும் களைகளிலிருந்து தப்பிச் சென்று ஒதுங்கிப் போய் உள்ளே உண்டாகும் நீர்மையாகிய புணர்ச்சியில் ஊடலைக் கொண்டு மலர்களாகிய கண்கள் சிவக்கும் குளிர்ச்சியைக் கொண்ட மெல்லிய செங்கழுநீர் மலராகிய நாயகிக்கு விசாலமான செந்நெற் பயிராகிய நாயகன் தன்னுடைய தலையால் வணங்குகின்ற நிலத்தின் வளத்தால் இயல்பாகிய அழகு சிறப்பாக அமைந்த வளப் பத்தைக் கொண்ட வயல்கள் பக்கங்களில் இருக்கின்றன.' பாடல் வருமாறு:

கண்ணிலக் கடைசி யர்கள் கடும்களை யிற்

- பிழைத்தொதுங்கி, உண்ணிர்மைப் புணர்ச்சிக்கண் உறைத்து மலர்க்

- கண்சி வக்கும்