பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 பெரிய புராண விளக்கம்-4

வலிமையைப் பெற்ற கயல் மீன்களினுடைய தோற்றத்தைக் காட்டும் தடாகங்கள் பல அந்த ஊரில் விளங்கும்; விசாலமான வயல்கள் நெற்கதிர்களைக் கானச் செய்யும். பாடல் வருமாறு: - -

புயல் காட்டும் கூந்தல் சிறு புறம்காட்டப் புனமயிலின் இயல் காட்டி.இடை ஒதுங்க இனம் காட்டும்

. உழத்தியர்கள் முயல் காட்டும் மதிதோற்கும் முகம் காட்டக் கண்மூரிக் கயல் காட்டும் தடங்கள் பல கதிர்காட்டும்

தடம்பணைகள்.'

புயல்-மேகங்களினுடைய நிறத்தை; ஒருமை பன்மை மயக்கம்; ஆகு பெயர். காட்டும்-தோன்றச் செய்யும்; எடுத்துக் காட்டும். கூந்தல்-கூந்தல்கள்; ஒருமை பன்மை மயக்கம். சிறு-சிறிய. புறம்-முதுகுகளில்; ஒருமை பன்மை மயக்கம். காட்ட-தொங்கித் தோன்ற, ப், சந்தி. புனகாட்டில் வாழும். மயிலின்-மயில்களினுடைய ஒருமை பன்மை மயக்கம். இயல்-இயல்பை. காட்டி-அவர்களினுடைய உடம்புகள் காட்டிக் கொண்டு இருக்க. இடை-தங்களுடைய இடுப்புக்கள்; ஒருமை பன்மை மயக்கம். ஒதுங்க-வளைய. இனம்-தங்களுடைய சாதிக்கு ஏற்ற பண்புகளை ஆகுபெயர். காட்டும்-எடுத்துக் காண்பிக்கும். உழத்தியர்கள்-உழவர்களி 'னுடைய பெண்கள். முயல்-முயலாகிய கறையை. காட்டும். காண்பிக்கும். மதி-சந்திரன். தோற்கும்-தோல்வியை அடையச் செய்யும். முகம்-முகங்களை ஒருமை பன்மை மயக்கம். காட்டகொண்பிக்கக் சந்தி. கண்-அவர்களுடைய கண்கள்; ஒருமை பன்மை மயக்கம். மூரி-வலிமையைப் பெற்ற. க், சக்தி, கயல்-கயல் மீன்களினுடைய தோற்றத்தை; ஒருமை பன்மை மயக்கம்; ஆகுபெயர். காட்டும்-காணச் செய்யும். தடங்கள்-தடாகங்கள். f_Jół)--Lio) அந்தக் கஞ்சாறுாரில் விளங்கும். தடம்-விசாலமான பணைகள்வய்ல்கள். கதிர்-நெற்கதிர்களை ஒருமை பன்மை மயக்கம். காட்டும்-காணுமாறு செய்யும். -