பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானக் கஞ்சாற நாயனார் புராணம் 367

யும்-துவசங்களும் ஒருமை பன்மை மயக்கம். நகில்-கொங்கை களைப் பெற்ற : ஒருமை பன்மை மயக்கம். கொடியும்-பூங் கொடிகளைப் போன்ற பெண்மணிகளும்;உவம ஆகுபெயர்; ஒருமை பன்மை மயக்கம். மகளிருக்குப் பூங்கொடியை உவமையாகக் கூறும் இடங்களை முன்பே ஓரிடத்தில் கூறி னோம்; ஆண்டுக் கண்டுணர்க. பூம்-மன்மதன் தன்னுடைய மலர்கள்ாகிய. கணை-அம்புகளை எய்யும். அந்த மலர் களாவன: தாமரை மலர், மாமலர், அசோக மலர், முல்லை மலர், நீலோற்பல மலர் என்பவவை. நினைக்கும் அரவிந்தம் நீள்பசலை மாம்பூ அனைத்துணர்வும் நீக்கும் அசோகு-நுனித் துணரின், முல்லை.இடை காட்டும் முழுநீலம் மாதே, கொல்லும் மதன் அம்பின் குணம்.” என வருவதைத் காண்க. வீதியில். கஞ்சாறுாரில் உள்ள தெருவில். அனைவோர்.சேர்ந்து நடக்கும் மக்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். புலம்-ஐம்புலன்கள்; ஒருமை பன்மை மயக்கம். அவை மெய், வாய், கண்கள், மூக்கு, செவிகள் என்பவை. புலம்-அறிவு எனலும் ஆம். மறுகும்-மயங்கும். சில மறுகு-சில வீதிகளில்; ஒருமை பன்மை மயக்கம். உள-இருக் கின்றன; இடைக் குறை. ஆல்: அசை நிலை. தோரணங்களும் பூரண கும்பங்களும் சில வீதிகளில் இருக்கின்றன என்பது கருத்து: . . . -

அடுத்து வரும் 6-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

தங்களுடைய திருமாளிகைகளில் அ ை ம ந் தி ரு க்கு ம் நிலையைப் பெற்ற இல்லறத்தின் வழியில் தாங்கள் ஈட்டிக் கொண்டுவந்து சேர்த்த செல்வ்த்தின் வளம் பெருகி விளங்கும் தொழிலாக அமையும் உழவாகிய தொழிலில் மிகுதியான சிறப்பைப் பெற்ற பெருமையைக் கொண்ட குடும்பங்கள் சேர்ந்து தாங்கள் பெற்ற சாயல் மயிலைப் போல விளங்கும் பெண்மலணிகள் நடனத்தைச் செய்ய அப் போது அடிக்கப்படும் மத்தளம் ஒலிக்கும் திருவிழாச் செறிந்திருக்கும் தெருக்களை உடையதாக அந்தக் கஞ்சாறுரர் விளக்கத்தைப் பெற்றது. பாடல் வருமாறு: ' ' ". . . .