பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானக் கஞ்சாற நாயனார் புராணம் 369

" அப்பதியில் குலப்பதியாய் அரசர்சே னாபதியாம்

செப்பவரும் குடிவிளங்கத் திருவவதாரம்செய்தார் மெய்ப்பொருளை அறிந்துணர்ந்தார் விழுமிய

வேளாண்கு டிமை வைப்பனைய மேன்மையினார் மானக்கஞ் சாறனார்."

அட்பதியில்-அந்தக் கஞ்சாறுாரில். குல-தமது சாதியினு டைய. ப்: சந்தி. பதியாய்-தலைவராகவும். அரசர்-மன்னரு டைய. சேனாபதியாம்-படைகளின் தளபதியாகவும். செப்பசொல்லுவதற்கு அரும்- அருமையாக இருக்கும். குடி-தம் முடைய குடும்பம். விளங்க-விளக்கத்தை அடையும் வண்ணம். த், சந்தி. மெய்-உண்மையான, ப்: சந்தி. பொருளை-பரம்பொருளை அறிந்து-தெரிந்து கொண்டு. உணர்ந்தார்-சிவஞானத்தைப் பெற்றவரும். விழுமிய-மேம் பாட்டைக் கொண்ட. வேளாண்-வேளாளர்களினுடைய, திணை மயக்கம். குடிமை-குடும்பங்களினுடைய தன்மையில். வைப்பு-சேமநிதியை. அணைய-போன்ற மேன்மையினார். மேம்பாட்டைப் பெற்றவராகிய, மானக்கஞ்சாறனார். மானக் கஞ்சாற நாயனார். திருவவதாரம் செய்தார். திருவவதாரம் புரிந்தருளினார்.

அடுத்து வரும் 8-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: பணிவைப் பெற்ற திருமேனி வடிவத்தைப் பெற்றவர்; பாம்புகளோடும் குளிர்ச்சியைப் பெற்ற பிறைச்சந்திரனாகிய அணிகலனைப் பெற்ற சடாபாரத்தைக் கொண்ட திருமுடியை உடையவராகிய சிவபெருமானாருக்கு ஆளாக விளங்கும் பதவியை அடைந்த குறைதல் இல்லாத பெரு மையைப் புெற்றிருக்கும் பாக்கியத்தைப் பெற்றவர்; தம்முடைய தலைவராகிய சிவபெருமானுடைய வெற்றிக் கழலைப் பூண்ட திருவடிகளைச் சேர்ந்து விளங்கும் துணிவைப் பெற்ற திருத்தொண்டர்களுக்கே அவர்கள் இட்ட ஏவல்களைப் புரியும் திருப்பணியை மேற்கொண்டவர். அந்த மானக் கஞ்சாற நாயனார். பாடல் வருமாறு:

பெ.-4-24