பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 - - பெரிய புராண விளக்கம்-4

பணிவுடைய வடிவுடையார் பணியினொடும் பணி

- - மதியின் அணிவுடைய சடைமுடியார்க் காளாகும் பதம்பெற்ற தணிவில்பெரும் பேறுடையார்; தம்பெருமான்

- கழல்சார்ந்த துணிவுடைய தொண்டர்க்கே ஏவல்செயும் தொழில்

- - பூண்டார் .' பணிவு-பணிவை. உடைய-பெற்ற வடிவு-திருமேனி வடிவத்தை. உடையார்-பெற்றவர். பணியினொடும்-பாம்பு களோடும்; ஒருமை பன்மை மயக்கம். பனி-குளிர்ச்சியைப் பெற்ற மதியின்-பிறைச் சந்திரனாகிய அணிவு - அணி கலனை. உடைய-பெற்ற சடை-சடாபாரத்தைக் கொண்ட. முடியார்க்கு - திருமுடியை உடையவராகிய சிவபெரு மானாருக்கு ஆளாகும்-ஆளாக விளங்கும். ஆள்-அடியவர். பதம்-பதவியை. பெற்ற-அடைந்த தணிவு-குறைதல். இல்இல்லாத கடைக்குறை. பெரும்-பெருமையைப் பெற் அறிருக்கும். பேறு-பாக்கியத்தை. உடையார்-பெற்றவர். தம்-தம்முடைய. பெருமான்- தலைவனாகிய சிவபெரு மானுடைய கழல்-வெற்றிக் கழலைப் பூண்ட திருவடிகளை: ஆகு பெயர். சார்ந்த-இடைவிடாமல் தியானம் செய்த. துணிவு-உறுதியை. உடைய-பெற்ற தொண்டர்க்கே-திருத் தொண்டர்களுக்கே: ஒருமை பன்மை மயக்கம். ஏவல்அவர்கள் இட்ட ஏவல்களை ஒருமை பன்மை மயக்கம். செயும்-புரியும்; இடைக்குறை. தொழில்-திருப்பணியை. பூண்டார்-மேற்கொண்டவர் அந்த மானக் கஞ்சாற நாயனார்; தோன்றா எழுவாய். -

பிறகு வரும் 9-ஆவது பாடலின் கருத்து வருமாறு:

ஒப்பு இல்லாத பெரிய செல்வத்தினுடைய வளம் பெருகி உண்டாக அந்த வளம் எல்லாம் கங்கையாறு த்ங்கும் சடா பாரத் தொகுதியைத் தம்முடைய தலையின் மேற் பெற்ற அந்தணராகிய சிவபெருமானாருடைய அடியவர்கள் ஆக விளங்கும் முடிவு இல்லாத பெருமையைப் பெற்ற